குட்நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. நகைக் கடைகளில் குவியும் மக்கள்..

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ..73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த வாரத்தில் மட்டும் ரூ.1200-க்கு மேல் விலை குறைந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.9,235-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.320 குறைந்து, ரூ..73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல், இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : இப்ப உங்களிடம் ரூ.1 கோடி இருக்கா? 25 ஆண்டுகளுக்கு பின் அதன் மதிப்பு இத்தனை லட்சம் தான்! காரணத்தை தெரிஞ்சுக்கோங்க..!

RUPA

Next Post

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்..? சற்று நேரத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..

Tue Aug 19 , 2025
Anbumani's removal from PMK..? An announcement that no one expected..
3161612 anbumaniramadoss 1

You May Like