Breaking : குட்நியூஸ்.. இன்று ஒரே நாளில் ரூ.1,320 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்ததால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000, ரூ.87,000, ரூ.88,000, ரூ.89,000 என உச்சம் தொட்டு வந்தது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதே போல் இந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் ரூ.3,900 வரை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு கிராமுக்கு ரூ.165 குறைந்து, ரூ.11,260க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.90,080-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,320 குறைந்ததால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

ஆனால் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் ரூ. 3 உயர்ந்து ரூ.180க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது..

Read More : சூப்பர் வாய்ப்பு…! மாணவர்களுக்கு ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை…! விண்ணப்பிக்க கால அவகாசம்…!

English Summary

Jewelers are relieved as the price of gold fell by Rs. 1,320 per sovereign in a single day.

RUPA

Next Post

ஆண்களே.. தினமும் கிவி பழம் சாப்பிட்டால் அந்த பிரச்சனையே உங்களுக்கு வராது..! NCBI ஆராய்ச்சி என்ன சொல்கிறது..?

Fri Oct 10 , 2025
Men.. if you eat kiwi fruit every day, you won't have that problem..! What does NCBI research say..?
Kiwi fruit

You May Like