2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.79,000ஐ தாண்டியது. பின்னர் கடந்த செவ்வாய் கிழமையும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்..
இதை தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.81,920க்கு விற்பனை செய்யப்பட்டதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்..
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.10,220க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.160 குறைந்து, ரூ.81,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் இன்று வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.143க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,43,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..
Read More : ‘இந்தியா மீது 50% வரி விதிப்பது எளிதல்ல; உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிட்டது’!. அதிபர் டிரம்ப்!