குட்நியூஸ்.. விஜயதசமி நாளில் சரசரவென குறைந்த தங்கம் விலை.. ஆனால் புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை..

gold price prediction

விஜயதசமி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040க்கு விற்பனை செய்யப்படுகிறது..

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்திலும் திங்கள், செவ்வாய் என 2 நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தது.. ஆனால் நேற்று காலை, மாலை என 2 முறை தங்கம் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் விஜயதசமி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை சென்னையில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து, ரூ.10,8280க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 87,040க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.. எனினும் இன்று வெள்ளியின் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.163க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,63,000 விற்பனையாகிறது.

Read More : வரலாற்றை மாற்றிய எலான் மஸ்க்..!! ரூ.41.7 லட்சம் கோடி சொத்துடன் முதலிடம்..!! எதிர்காலத்தில் முதல் டிரில்லியனர்..!!

English Summary

Today, on the day of Vijayadashami, the price of gold has dropped by Rs. 560 per sovereign and is being sold at Rs. 87,040.

RUPA

Next Post

இருமலால் அவதிப்படுகிறீர்களா?. மருந்துக்கு பதிலாக இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க!. நொடிகளில் நிவாரணம்!

Thu Oct 2 , 2025
உங்களுக்கு இருமல் இருந்தால், அது சில நாட்களாக இருந்தாலும் சரி அல்லது மிகவும் வயதானதாக இருந்தாலும் சரி, இந்த வீட்டு வைத்தியம் மூலம் நீங்கள் மிகவும் நாள்பட்ட இருமலைக் கூட மிக விரைவாகவும் எளிதாகவும் குணப்படுத்த முடியும். இந்த அற்புதமான தீர்வை ஆயுர்வேத மருத்துவர் சலீம் ஜைதி தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார், அதில் அவர் வறட்டு இருமல் மற்றும் சளி இருமல் இரண்டிற்கும் வேலை செய்யும் ஒரு தீர்வை […]
cough home medicine

You May Like