Flash : குட்நியூஸ்.. மீண்டும் அதிரடியாக சரிந்ததது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.100 குறைந்து, ரூ.11,600க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ.92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

ஆனால் இன்று வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.173க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : ஒவ்வொரு இந்திய எண்ணும் ஏன் +91 இல் தொடங்குகிறது?. அது வெறும் எண் அல்ல, அது ஒரு அடையாளம்!.

RUPA

Next Post

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா..! ஆனால்.. மருத்துவர் சொன்ன முக்கிய அப்டேட்..!

Wed Nov 12 , 2025
பாலிவுட் பழம்பெரும் தர்மேந்திரா, பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார்.. 89 வயதான நடிகர் தர்மேந்திரா மருத்துவ பரிசோதனைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். இன்று (நவம்பர் 12) […]
dharmendra

You May Like