Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold coins gold jewellery floor background 181203 24090 1

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் ரூ.2000க்கு மேல் தங்கம் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.70 குறைந்து, ரூ.9,375க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

லாரியின் முன்புறம் 2 கம்பிகள் இருப்பது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..

Mon Aug 11 , 2025
Do you know why there are 2 wires in front of the truck?
Lorr

You May Like