ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா ‘நம்பர்-3’ இடத்துக்கு முன்னேறினார். சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார்
சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 804 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சர்மா (829 புள்ளி) 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (856) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (738) 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி (706), ரவி பிஷ்னோய் (674), அர்ஷ்தீப் சிங் (653) முறையே 3, 7, 10வது இடத்தில் நீடிக்கின்றனர். நியூசிலாந்தின் ஜேக்கப் டபி (723) முதலிடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்தின் அடில் ரஷித் (710), 4வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். ‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (252) ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
Readmore: குட்நியூஸ்!. சமையல் எண்ணெய் விலையை குறைக்க உத்தரவு!. மத்திய உணவுத் துறை அதிரடி!