சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய விலை விவரங்கள் :
இந்த விலை குறைப்பு சென்னை மட்டுமல்லாமல், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட அனைத்து மெட்ரோ நகரங்களுக்கும் பொருந்தும். விலை குறைக்கப்பட்டதை அடுத்து 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டரின் புதிய விலை தற்போது ரூ. 1,739.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் விலை ரூ. 868.50 என்ற நிலையிலேயே நீடிக்கிறது. வீட்டு உபயோகச் சிலிண்டரின் விலை குறையாவிட்டாலும், சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் அதன் விலை உயராமல் இருப்பது இல்லத்தரசிகளைச் சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பப் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த மாதாந்திர விலை நிர்ணயம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Read More : திருவண்ணாமலை தீபத்தை நேரில் தரிசிக்க வேண்டுமா..? ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி..?



