ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.3,300 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்தது.. இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200-க்கு விற்கப்பட்ட நிலையில் மாலையில் ரூ.1,16,400க்கு ஆக குறைந்தது.. இன்று காலை கிராமுக்கு ரூ.450 குறைந்த தங்கம் விலை, கிராமுக்கு ரூ.100 குறைந்தது.. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.14,650க்கு விற்கப்பட்ட நிலையில் மாலையில் ரூ.14,550 ஆக குறைந்தது.
அதே போல் இன்று காலை வெள்ளி விலை உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.345க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 குறைந்து ரூ.3.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று காலையில் அதிகரித்த நிலையில் மாலையில் குறைந்துள்ளது.
Read More : இது எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? CM ஸ்டாலினுக்கு லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த அண்ணாமலை..!



