காலநிலை நடவடிக்கைகளில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் ஐந்து மில்லியனுக்கும் (அல்லது 50 இலட்சத்துக்கும்) மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிலாய்ட் இந்தியா (Deloitte India) மற்றும் ரெயின்மேட்டர் ஃபவுண்டேஷன் (Rainmatter Foundation) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தி ஸ்டேட் ஆஃப் கிளைமேட் ரெஸ்பான்ஸ் இன் இந்தியா’ (The State of Climate Response in India) என்ற இந்த அறிக்கையில் “ இந்த இலக்கை அடைய, அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படும். இதன் மூலம் வருடாந்திர 3.5 முதல் 4 டிரில்லியன் டாலர் வரை பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, மூலப்பொருள் சேகரிப்பு, உற்பத்தி, பராமரிப்பு, பசுமை பொருட்கள், லாஜிஸ்டிக்ஸ், கிடங்கு மேலாண்மை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் “ மழை, வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் உயிரின இழப்பு (biodiversity loss) போன்றவை இயற்கை அமைப்புகளை பாதித்து, உட்புகும் செலவுகளை அதிகரிக்கின்றன. எனவே, கொள்கை உருவாக்குநர்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகியவை தனித்திட்டங்களிலிருந்து விலகி, ஒருங்கிணைந்த ‘சிஸ்டம்ஸ்-பேஸ்ட் அப்ரோச்’ மூலம் செயல்பட வேண்டும்.
டிலாய்ட் இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர் அஷ்வின் ஜேக்கப் இதுகுறித்து பேசிய போது “ இந்தியாவின் காலநிலை நடவடிக்கைகள் தற்போது சிதறிய முயற்சிகளாக உள்ளன; அவை ஒன்றிணைந்த பணி உணர்வாக மாற வேண்டும். அதற்கு முதலீடுகளை பாதுகாக்கும் கொள்கைகள், தரமான தரவுகள், மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு அவசியம்,” என்று தெரிவித்தார்.. .
அறிக்கையுடன் இணைந்து நடத்தப்பட்ட ‘2025 குடிமக்கள் காலநிலை கருத்துக்கணிப்பு’ (Citizen Climate Survey) படி, 86% பேர் காலநிலை மாற்றம் தங்கள் நாளைய வாழ்வை பாதிக்கிறது என கூறினர். 33% பேர் உடல் நலம் மற்றும் வாழ்க்கைமுறை பாதிப்புகளை தெரிவித்தனர். 44% பேர் கழிவுகளை பிரித்து நிர்வகிக்கிறார்கள், 40% பேர் மின்சாரம்/தண்ணீர் பயன்பாட்டை குறைக்கிறார்கள், 30% பேர் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்கிறார்கள். ஆனால், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இல்லாததால் இதன் தாக்கம் குறைந்துள்ளது.
மேலும், 22% பேர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; அதில் 33% பேர் “தனிநபர் தாக்கம் குறைவு”, 30% பேர் “ஊக்கத்தொகை தேவை”, 25% பேர் “அறிவு குறைவு” என்பதைக் காரணமாகக் கூறினர்.
அதே நேரத்தில், ‘கார்ப்பரேட் கிளைமேட் ரெடினஸ் சர்வே 2025’ படி, 47% நிறுவனங்கள் பணியாளர்களின் உடல்நலம் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.. 44% நிறுவனங்கள் விதிமுறைகள் மற்றும் நுகர்வோர் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதால் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தன.
41% நிறுவனங்கள் காலநிலை அபாயம் மற்றும் தழுவும் திறனை மேம்படுத்த முயற்சிக்கின்றன.. ஆனால், இந்த முயற்சிகள் இன்னும் சிதறியவையாக உள்ளன.
டிலாய்ட் இந்தியா கூட்டாளர் பிரஷாந்த் நுடுலா பேசிய போது “ “பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்க, தனித்தனி முயற்சிகளை மீறி அரசு, தொழில், சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட புதிய கூட்டணிகள் உருவாக வேண்டும்,” என்றார்.
அறிக்கை பரிந்துரைக்கும் முக்கிய அம்சங்கள்:
காலநிலை இலக்குகளை கொள்கை மற்றும் நிறுவன முடிவெடுப்புகளில் இணைத்தல்
தரவு அமைப்புகளை மேம்படுத்தல்
காலநிலை திறன்களை வளர்த்தல்
தேசிய, மாநில, உள்ளூர் மட்டங்களில் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பு உருவாக்குதல்
ஆற்றல், வேளாண்மை, கழிவு மேலாண்மை போன்ற துறைகளை இணைக்கும் இணக்கமான டிஜிட்டல் அமைப்புகள் உருவாக்குதல்.
ரெயின்மேட்டர் ஃபவுண்டேஷன் தலைமைச் செயல் அதிகாரி சமீர் ஷிசோடியா பேசிய போது “சிக்கல்களை புரிந்து, பிரிவுகள் இல்லாமல் இணைந்து செயல்பட்டால், அரசு மற்றும் நிறுவனங்கள் புதிய திறன்கள், புதுமைகள் மற்றும் உறுதிப்பாட்டை உருவாக்க முடியும்,” என்று தெரிவித்தார்…
Read More : மக்களே..!! 2026 பொங்கல் பரிசு என்ன தெரியுமா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் ஆர்.காந்தி..!!



