ரயில்வே துறையில் பயிற்சி பெற நல்ல வாய்ப்பு.. டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

INDIAN RAILWAYS 2025

மத்திய அரசு ரைட்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பு மட்டுமின்றி டிகிரி படிப்புகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி 1961 கீழ் 1 வருட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


வயது வரம்பு: விண்ணப்பதார்கள் 18 வயதை நிறைந்து இருக்க வேண்டும்.

தொழிற்பயிற்சி விவரம்:

பொறியியல் பட்டதாரிகள்: பொறியியல் பட்டதாரிகளுக்கான பிரிவில் சிவில், கட்டக்கலை, எலெக்ட்ரிக்கல், சிக்னல், மெக்கானிக்கல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகள் 110 இடங்கள் நிரப்பப்படுகிறது.

பொறியியல் அல்லாத பட்டதாரிகள்: பட்டதாரிகள் பிரிவில் நிதி மற்றும் ஹெச்.ஆர் பிரிவில் 36 இடங்கள் நிரப்பப்படுகிறது.

டிப்ளமோ தகுதி: டிப்ளமோ தகுதியின் கீழ் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், வேதியியல் பிரிவில் 36 இடங்கள் நிரப்பப்படுகிறது.

ஐடிஐ தகுதி: ஐடிஐ தகுதியின் கீழ் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் இதர பிரிவில் 49 இடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி:

  • பொறியியல் பிரிவிற்கு மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டபப்டிப்பு முடித்தவர்களாக விண்ணப்பிக்கலாம்..
  • பொறியியல் அல்லாத இடங்களுக்கு BA/BBA/B.Com/B.Sc./BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • டிப்ளமோ மற்றும் ஐடிஐ பிரிவிற்கு மேல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை:

  • பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையாக பயிற்சி கால வரை அளிக்கப்படும்.
  • பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கும் மாதம் ரூ.14.,000 வழங்கப்படும்.
  • டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.12,000 மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. விண்ணப்பதார்கள் அவர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஏற்கெனவே, தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது.

எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் https://nats.education.gov.in/student_type.php மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளங்களின் வழியாக பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, https://apprentice.rites.com:444/ApprenticeForm என்ற இணைப்பில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.12.2025

Read more: தந்தூரி சிக்கன் சாப்பிடுவதால் புற்றுநோய் வருமா? ஆய்வில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

English Summary

Good opportunity to get training in the railway sector.. Degree, Diploma, ITI graduates can apply..!

Next Post

கோவையின் புதிய அடையாளம்.. பிரம்மாண்ட செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

Tue Nov 25 , 2025
கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார்.. ரூ.208.50 கோடியில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த பூங்கா வளாகத்தில் செயற்கை மலைக் குன்று, அதில் இருந்து கொட்டும் நீர் வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் […]
cm stalin will inaugurate the coimbatore semmozhi park on the 25th 1

You May Like