உங்களை உளவு பார்க்கும் Google Chrome..!! லிமிட் ஓவர்..!! டேட்டாக்கள் திருடு போகும் அபாயம்..!! மத்திய அரசு எச்சரிக்கை..!!

Chrome 2025

இணையப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கூகுள் குரோம் (Google Chrome) உலாவியின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசின் CERT-In (Computer Emergency Response Team – India) அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.


புதிய பதிப்புகளுக்கு மேம்படுத்தப்படாத பழைய குரோம் பிரவுசர்களில் தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைப் பயன்படுத்தி, இணைய குற்றவாளிகள் பயனாளிகளின் தரவுகளைத் திருடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக CERT-In தெரிவித்துள்ளது.

யார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்..?

குறிப்பாக, கூகுள் குரோம்-இன் பதிப்பு எண் 142.0.7444.59/60 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள் (Linux, Windows, மற்றும் Mac OS-களில் பயன்படுத்துவோர்) உடனடியாக தங்கள் குரோம் பிரவுசரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று CERT-In அறிவுறுத்தியுள்ளது.

அப்டேட் செய்வது எப்படி..?

பயனாளர்கள் தங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் கூகுள் குரோம் பிரவுசரின் Settings பகுதிக்குச் சென்று, About Chrome என்ற பிரிவில் தங்கள் பதிப்பு எண்ணைச் சரிபார்த்து, புதிய பதிப்புக்கு உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடு போவதைத் தடுக்க உதவும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More : விநாயகரை வழிபடும்போது தோப்புக்கரணம், தலையில் குட்டு வைக்க என்ன காரணம்..? ஆன்மீகமும், அறிவியலும்..!!

CHELLA

Next Post

2026-27 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகமாகும் AI பாடத்திட்டம்...! மத்திய அரசு அறிவிப்பு...!

Sun Nov 2 , 2025
நாடு முழுவதும் பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஏஐ மற்றும் சிடி பாடங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் […]
school AI 2025

You May Like