பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம் AI (Sarvam AI), அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்புகள் மூலம் உலகளாவிய AI சமூகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. Sarvam Vision மற்றும் Bulbul V3 என்ற இரண்டு புதிய AI மாடல்கள், Optical Character Recognition (OCR) போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில், Google Gemini மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய AI நிறுவனங்களை மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
உலக நிறுவனங்களை முந்திய Sarvam Vision
X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், சர்வம் AI நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார், Sarvam Vision மாடல், olmOCR-Bench என்ற சோதனையில் 84.3% துல்லியத்தை (accuracy) பெற்றதாக கூறினார். இது Gemini 3 Pro மற்றும் DeepSeek OCR v2 போன்ற உலகளாவிய மாடல்களை விட அதிகமாகும். மேலும், OmniDocBench v1.5 என்ற மற்றொரு சோதனையில், Sarvam Vision 93.28% துல்லியத்தை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய மொழிகளில் முன்னணி – Sarvam Vision
இந்த மாடல், இந்திய மொழிகளைப் பொருத்தவரை மிகச் சிறந்ததாக இருப்பதாக பிரத்யுஷ் குமார் கூறினார். “இந்திய மொழிகளுக்கான OCR மாடல்களில் Sarvam Vision மிகச் சிறந்தது. 22 அட்டவணை செய்யப்பட்ட இந்திய மொழிகளையும் இது முழுமையாக ஆதரிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாடலில், வித்தியாசமான ஸ்கேன் தரம், பழைய மற்றும் புதிய ஆவணங்கள்,
1800 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை உள்ள உள்ளடக்கங்கள் போன்ற பலவகை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Bulbul V3 – இந்திய மொழிகளுக்கான Text-to-Speech மாடல்
Bulbul V3 என்பது சர்வம் AI உருவாக்கிய Text-to-Speech (உரை → குரல்) மாடல் ஆகும்.
இந்த மாடல், 35 விதமான குரல்களை ஆதரிக்கிறது, 22 அதிகாரப்பூர்வ இந்திய மொழிகளில் பேசக்கூடியது, பல்வேறு காலகட்டங்களை (1800 முதல் இன்றுவரை) உள்ளடக்கிய மாதிரி தரவுகளை கொண்டுள்ளது.. இதன் மூலம், இந்திய மொழிகளில் இயற்கையான மனித குரல் போன்ற ஒலியை உருவாக்க முடிகிறது.
3 பில்லியன் அளவுருக்கள் கொண்ட AI மாடல்
Sarvam AI வெளியிட்ட இந்த தொடர், 3 பில்லியன் (3B) அளவுருக்கள் கொண்ட State-space Vision-Language மாடலை உள்ளடக்கியது. படங்களுக்கு விளக்கம் எழுதுதல், படங்களில் உள்ள எழுத்துகளை அடையாளம் காணுதல், வரைபடங்களை புரிந்து விளக்குதல், சிக்கலான அட்டவணை தரவுகளை பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளை இந்த மாடல் செய்கிறது..
சர்வம் AI தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இந்திய மக்களுக்கு AI தொழில்நுட்பம் அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளது. “எங்கள் காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தை இந்தியா தன்னம்பிக்கையுடன், முழுக் கட்டுப்பாட்டுடன் ஏற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கேற்ற அடிப்படை AI கூறுகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், Sarvam AI-ஐ ஒரு தேசிய சுயாதீன A) முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்திய AI பயணத்தில் முக்கிய மைல்கல்
Sarvam AI-ன் இந்த சாதனை, இந்தியாவின் AI வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டத்தை குறிக்கிறது. இந்தியாவுக்கே உரிய மொழி மற்றும் தொழில்நுட்ப சவால்களை மையமாக வைத்து செயல்படுவதால், இந்த ஸ்டார்ட்அப் உலகளாவிய AI நிபுணர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
உலக தொழில்நுட்ப நிபுணரின் பாராட்டு
பிரபல தொழில்நுட்ப விமர்சகரான டீடி தாஸ் (Deedy Das), X தளத்தில் Sarvam AI குறித்து தனது கருத்தை பகிர்ந்தார். “Sarvam AI குறித்து நான் முன்பு தவறாக நினைத்தேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு வருடத்திற்கு முன்பு, சிறிய ‘இந்திய மொழி’ மாடல்களை பயிற்சி செய்வது தவறான திசை என நினைத்தேன். ஆனால் அவர்கள் அசத்தலாக திருப்பி விட்டார்கள். இந்திய மொழிகளுக்கான Text-to-Speech, Speech-to-Text மற்றும் OCR மாடல்களில் அவர்கள் சிறந்தவர்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்..
மேலும் “ Sarvam AI-ன் விலை நிர்ணயம் மிகவும் நியாயமானது.. இணையதளம் அழகாக வடிவமைக்கப்பட்டு, பயன்படுத்த மிகவும் எளிதானது.. பெரிய உலக AI நிறுவனங்கள் கவனம் செலுத்தாத இடங்களை Sarvam AI நிரப்பி வருகிறது..
இந்தியா போன்ற நாடுகளுக்குத் தேவையான ஒரு முக்கிய இடைவெளியை அவர்கள் நிரப்புகிறார்கள். தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் உருவாக்கியதை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்தியாவில் இருந்து வரும் மென்பொருள் தயாரிப்புகள் குறித்து இவ்வளவு மகிழ்ச்சி நான் நீண்ட காலமாக உணர்ந்ததில்லை. மிகச் சிறந்த வேலை” என்று டீடி தாஸ் பாராட்டினார்.
Read More : 10 நிமிடங்களில் ரூ. 10 லட்சம் கடன்.. Phonepe பயனர்களுக்கு குட்நியூஸ்..!



