கூகுள் உங்கள் உரையாடல்களைக் கேட்டு பதிவுசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் உலகில், கூகுள் என்பது உலகின் மிகப்பெரிய தேடு பொறி அதாவது Search engine ஆக உள்ளது… தகவல்களை தெரிந்துகொள்வது, நாம் செல்லும் இடத்திற்கான மேப்பை பயன்படுத்துவத், நம் சந்தேகங்களுக்கு விடை கண்டுபிடிப்பது என எதுவாக இருந்தாலும், கூகுள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால் நீங்கள் தற்செயலாக கூகுளில் ஏதேனும் செய்ய அனுமதி கொடுத்தால், அது உங்கள் உரையாடல்களைக் கேட்டு பதிவுசெய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா, அதைப் பற்றி தெரிந்து கொள்வோம் கொள்வோம்
கூகுள் உங்கள் உரையாடலை கேட்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது:
உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப்பில் கூகிள் குரோமைத் திறக்கவும்.
மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்யவும்
Settings-க்கு செல்லவும்.
அமைப்புகளில், தள அமைப்புகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தட்டவும்.
அதில்,
Location
Camera
Microphone போன்ற விருப்பங்கள் வரும்..
நீங்கள் என்ன செய்ய வேண்டும்:
தேவையில்லாத பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களுக்கான மைக்ரோஃபோன் அணுகலை முடக்க வேண்டும்..
தேவையில்லை என்றால் இருப்பிட கண்காணிப்பை முடக்க வேண்டும்..
Settings > Apps > Permissions என்பதற்குச் சென்று உங்கள் தொலைபேசியில் பயன்பாட்டு அனுமதிகளை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும்.
இது ஏன் முக்கியமானது?
உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது.
தேவையற்ற பின்னணி தரவு பயன்பாட்டைக் குறைக்கிறது.
தனிப்பட்ட உரையாடல்களின் கண்காணிப்பு அல்லது சேகரிப்பைத் தடுக்கிறது.
கூகுள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நீங்கள் வழங்கிய அனுமதிகளைக் கண்காணிப்பதன் மூலம் உங்கள் டிஜிட்டல் தனியுரிமையைக் கட்டுப்படுத்தவும் உதவும்..