இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் ஒரு சாதாரண மனிதன் தான்” என்ற மனநிலையுடன் வாழ்கிறார். அதுவே இவரை இன்று வரை மக்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைக்கும் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பெருமையாக கூறுகின்றனர்.
எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தாலும், விமர்சனங்களையும் அதே அளவில் எதிர்கொண்டவர் ரஜினி. குறிப்பாக அரசியல் அரங்கில் அவரது முடிவுகள் குறித்து பல்வேறு ட்ரோல்களும் விமர்சனங்களும் எழுந்தன. 2017-ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தாலும், உடல்நலக்காரணங்களால் பின்னர் அதிலிருந்து விலகினார்.
ரஜினி மீது விமர்சனங்கள் மற்ற விஷயங்களில் வைக்கப்பட்டாலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பாலும் அவரது பெயர் பெரிதாக கிசுகிசுக்களில் அடிபட்டது கிடையாது. இருப்பினும் நடிகை லதாவுடன் இணைக்கப்பட்ட கிசுகிசு அப்போது பேசுபொருளானது.இந்த நிலையில் அண்மையில் நடிகை லதா ரஜினிகாந்துடன் தன் உறவைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: “ரஜினிகாந்த் ரொம்பவே நல்லவர். அவர் எனக்கு நல்ல நண்பர். அந்த சமயத்தில் ரஜினி வளர்ந்துவரும் நடிகர். நான் அப்போதே பிரபலமாக இருந்தேன். குறிப்பாக எம்.ஜி.ஆர் ஹீரோயினாக இருந்தேன். ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஷூட்டிங் ஆழியார் அணைக்கட்டில் நடந்தது. அப்போது ரஜினி, மஞ்சுளா, விஜயகுமார் ஆகியோரும் நடித்தனர். அனைவரும் சேர்ந்து மாலையில் பேசுவோம், கோயிலுக்குப் போவோம்.
என்னையும் ரஜினியையும் இணைத்து பல கதைகள் சொல்லப்பட்டன. ஆனால் அதில் எதுவும் உண்மை இல்லை. அவர் நல்ல நடிகர் என்பதைத் தாண்டி மிகச்சிறந்த மனிதர். இன்றும் அவர் உலகளவில் புகழ்பெற்றவர். ஆனால் புகழை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் பழையபடி எளிமையாகவே இருக்கிறார். அதனால்தான் எனக்கு ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும்.” என்றார்.
Read more: பண்ணை வீட்டில் ரகசிய பார்ட்டி.. 22 சிறுமிகள் உட்பட 65 பேர் நிர்வாண டான்ஸ்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!