சிலர் எந்த பாத்திரத்தில் உணவு பொருட்களை வைத்திருந்தாலும் அதை அப்படியே வைத்து சூடு படுத்துவார்கள். இதனால் பாத்திரங்களின் அடியில் கருகி கறை ஏற்படும். அப்படியே சில சமயங்களில் சமைத்த பிறகு பாத்திரத்தில் அடி பிடித்து விடுவதுண்டு. இவற்றிற்கு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அப்படியே கொதிக்க வைக்க வேண்டும். பிறகு நன்றாக அழுத்தி தேய்த்தால் மறைந்துவிடும்.
பித்தளை, வெண்கலம் ,செம்பு பாத்திரங்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும். ஆனால் சிறிது நேரத்தில் கறுத்தும் விடும். அதற்கு இவற்றுடன் சிறிதளவு சாம்பல் கலந்து தேய்த்தால் நீண்ட நாட்கள் பளபளப்பு மாறாமல் இருக்கும். நாளாக நாளாக ஹாட் பாக்ஸ் சூடு குறைந்து போகும். அதை சுத்தம் செய்யும் போது சூடான நீரை பயன்படுத்தினால் ஹாட் பாக்ஸ் எப்போதும் ஹாட் ஆகவே இருக்கும். கழுவி வைக்கும் பாத்திரங்களை எப்போதும் கவிழ்த்து வைத்தால் பல்லி போன்றவற்றால் அசுத்தம் ஆகாமல் இருக்கும். உள்ளுக்குள் அதிகம் தூசு படியாமலும் இருக்கும்.
வெளியூருக்கு செல்லும் பொழுது தவறாமல் மறக்காமல் குக்கர் வெயிட்களை ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு டப்பாவில் போட்டு நன்றாக மூடி வைத்து விட்டு சென்றால் அதற்குள் புழு பூச்சிகள் அடையாமல் இருக்கும். அதேபோல் அவற்றை சமைக்கும் பொழுது நன்றாகத் தட்டி விட்டு கழுவிய பிறகு சமைப்பது உத்தமம். மிக்ஸி ஜார்களில் எண்ணெய் தேய்த்து வைத்து விட்டு சென்றால் பழுதாகாமல் இருக்கும். திரும்ப வந்து மிக்ஸியை ஓட விடும்போது ஜார் இறுகி கடினமாகாமல் வைத்தவுடன் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
முதலில் கறை நிறைந்த பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பின் பேங்கிங் சோடா தூவி விடுங்கள். அது சில நிமிடங்கள் ஊறியதும் ஸ்கிரப் கொண்டு நன்கு தேய்க்கவும். நன்கு ஸ்க்ரப் செய்த பிறகு, பாத்திரங்களை மீண்டும் சூடான நீரில் கழுவவும். பின் பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்கும். 1 கப் வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி உப்பு மற்றும் 1 எலுமிச்சை சாறு கலக்கவும். அனைத்து பொருட்களையும் ஒரு கரண்டியால் நன்கு கலக்கவும். இந்தக் கலவையை பாத்திரத்தில் ஊற்றிவிடவும். இது விடாபிடி கறைகள் மற்றும் துர்நாற்றத்தை எளிதில் அகற்ற உதவுகிறது.
அரிசி நீரில், ஸ்டார்ச் மற்றும் சிட்ரிக் அமிலம் காணப்படுகின்றன. அவை பாத்திரத்தில் உள்ள கறைகளை எளிதில் அகற்றும் . இதைச் செய்ய, கறை நிறைந்த பாத்திரங்களில் அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். அதன் பிறகு, அரிசி நீரின் குறிப்பிட்ட வாசனையை நீக்க, பாத்திரங்களை நன்கு தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
Readmore: அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கா..? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..? வாங்க பார்க்கலாம்..