10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை..!! தமிழ்நாட்டில் 1,483 காலிப்பணியிடங்கள்..!! மாதம் ரூ.50,400 வரை சம்பளம்..!!

Job 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர்

மொத்த காலியிடங்கள்: 1,483

கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

சம்பளம்: இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

* பொதுப் பிரிவினர்: 18 முதல் 32 வயது வரை.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்: 18 முதல் 34 வயது வரை.

* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள்: 18 முதல் 37 வயது வரை.

* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. இதர பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை 10.10.2025 அன்று தொடங்கிவிட்டது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 09.11.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnrd.tn.gov.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

Read More : விடிய விடிய காதலனுடன் ரூமில் தங்கியிருந்த மாணவி..!! விடிந்ததும் அதிவேகத்தில் பறந்த கார்..!! உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..!!

CHELLA

Next Post

வருகின்ற டிசம்பர் மாதம் முதல் விடுபட்ட மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை...! துணை முதல்வர் தகவல்...!

Tue Nov 4 , 2025
வருகின்ற டிசம்பர் மாதம் முதல், இன்னும் கூடுதலான மகளிருக்கும், யார், யாருக்கெல்லாம் விடுபட்டுள்ளதோ அவர்களுக்கும் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நேற்று நடந்த அரச நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் சுமார் 73 ஆயிரம் பேருக்கு, இந்த அரங்கத்தில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு, சுமார் 300 கோடி ரூபாய் […]
udhaynidhi magalir 2025

You May Like