சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியதில் பெருமை கொள்வதாக முதல்வர் தெரிவித்தார்.. மேலும் இந்த விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.. இன்று பட்டம் பெற்றவர்கள் காலத்தை கடந்து வாழும் படைப்புகளை வழங்க வேண்டும்..
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நான் புறக்கணிக்கவில்லை… இது தான் அரசியல் மாண்பு, இது எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.. மேலும் 4 புதிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார்..
தமிழ்நாட்டின் கிராமிய கலைகள், நாட்டுப்புற கலைகளுக்காக மதுரை வலையங்குளத்தில் கிராமிய கலைகள் பயிற்சி பள்ளி அமைக்க, அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்படும்.. இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திற்கு மானியம் ரூ.5 கோடி வழங்கப்படும்.. கவின் கலை. பல்கலைக்கழகத்தில் முதுநிலை பாடப்பிரிவு தொடங்கப்படும்.. நான் முதல்வன் திறன் சார்ந்த படிப்புகள் இசை மற்றும் கவின் கலை பயின்று வரும் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும்.. இப்படி பல்வேறு வகையில் உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல திராவிட மாடல் அரசு துணையாக இருக்கும்..” என்று தெரிவித்தார்.
Read More : நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!


