இந்தியா முழுவதும் பல முக்கிய விமான நிலையங்களில் GPS ஏமாற்று வேலையால் (GPS Spoofing) மற்றும் GNSS குறுக்கீடு பிரச்சினைகள் நடந்துவருகின்றன என்று மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ராஜ்யசபாவில் பேசிய போது “ நவம்பர் 2023 முதல், DGCA (விமானப் போக்குவரத்து பொதுத் துறை இயக்ககம்) GPS ஏமாற்று வேலை அல்லது குறுக்கீடு சம்பவங்களை கட்டாயமாக அறிவிக்க உத்தரவிட்டது. அதற்கு பிறகாக, நாட்டின் பல விமான நிலையங்களிலிருந்து தொடர்ந்து இத்தகைய சம்பவங்களின் அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.
எந்தெந்த விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன?
டெல்லி மட்டுமல்லாமல், கொல்கத்தா, அம்ரித்சர், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய விமான நிலையங்களிலும் GNSS (Global Navigation Satellite System) குறுக்கீடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு குறைந்தபட்ச ஆபரேட்டிங் நெட்வொர்க் (Minimum Operating Network -MON) என்ற அமைப்பை இயக்கி வருகிறது.
இது செயற்கை கோள் நெவிகேஷன் (satellite navigation) செயலிழந்தாலும், பழமையான தரைத்தள வழிச் சுட்டி அமைப்புகள் (ground-based navigation systems) மூலம்
விமானங்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவதற்கான மாற்று நடைமுறையாக செயல்படுகிறது. அதாவது, GPS சிக்னல் பாதிக்கப்பட்டாலும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை அமைப்பை இயக்கி வருகிறது.
GPS ஏமாற்று வேலை என்றால் என்ன?
GPS ஏமாற்று வேலை என்பது, செயற்கைக்கோள்கள் அனுப்பும் உண்மையான GPS சிக்னல்களே போலக் கள்ள (fake) சிக்னல்கள் அனுப்புவது.. இதனால் GPS ரிசீவர்கள் (விமானம், கார், மொபைல் போன்றவை) தவறான இடத்தைக் கூட சரியானதாக நம்பி ஏற்றுக்கொள்கின்றன. எனினும் ஜாமிங் என்பது GPS சிக்னலை முழுவதும் குலைக்கும், எந்த இடத்தையும் கண்டறிய முடியாது. அனால் ஜிபிஎஸ் ஏமாற்றுதல் என்பது, சிக்னலை தடுப்பதில்லை; ஆனால் தவறான சிக்னல் அனுப்பி, “சரியான தகவல் வருகிறது” என்று ரிசீவரை ஏமாற்றுகிறது.
ஏன் இது ஆபத்தானது?
விமானங்கள், கப்பல்கள், ட்ரோன்கள், கார்கள் தவறான இடத்தை நம்பி தவறான வழியில் செல்லச் செய்யும். வழிசெலுத்தல் (navigation) பிழைகள் ஏற்பட்டு பாதுகாப்பு அபாயங்கள் உருவாகலாம். 2025 நவம்பர் 7 அன்று டெல்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் விமான சேவை தடங்கல்கள் ஏற்பட்டன. இதற்கு பல காரணங்கள் ஒன்றாக இணைந்தன..
ATC (Air Traffic Control) கோளாறு
விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் ATC அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது முழு அமைப்பையும் மெதுவாக்கியது.
ரன்வே பழுது
முக்கியமான 10/28 ரன்வே பழுது பார்க்க மூடப்பட்டிருந்தது.
ILS (Instrument Landing System) செயலிழக்கப்பட்டது
ரன்வே பழுது வேலைகள் காரணமாக, விமானங்களை துல்லியமாக இறக்க உதவும் ILS அமைப்பு தற்காலிகமாக அணைக்கப்பட்டது.
GPS அடிப்படையிலான RNP முறையை நம்ப வேண்டிய நிலை
ILS இல்லாததால், விமானங்கள் GPS அடிப்படையிலான Required Navigation Performance (RNP) முறையின் மூலம் தரையிறங்க வேண்டியிருந்தது.
GPS ஏமாற்று வேலை பிரச்சனை
அதே நேரத்தில், டெல்லி அருகே GPS ஏமாற்றுதல் நடந்ததால், GPS சிக்னல்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விமானங்கள் சரியான இடத்தைக் கணக்கிட முடியாமல், பைலட்டுகளுக்கு துல்லியமான நெடுவரை/திசை தகவல் கிடைக்கவில்லை. இதனால் பல விமானங்கள் இறங்க முடியாமல் தாமதமானது. வானில் நெரிசல் ஏற்பட்டது.. சில விமானங்கள் மற்ற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.. எனவே ATC கோளாறு + ரன்வே மூடல் + ILS இல்லை + GPS ஏமாற்று வேலை என இந்த 4 காரணங்கள் சேர்ந்து டெல்லி விமான நிலையத்தில் பெரிய அளவில் தடங்கல் உண்டாக்கின.
Read More : ஓடும் ரயிலில் உடல்நிலை சரியில்லாமல் போனால், உடனடியாக மருத்துவரை அழைக்கலாம்..! ரூ.100 தான் கட்டணம்!



