பெரும் எதிர்பார்ப்பு!. அலாஸ்காவில் டிரம்ப் – புடின் இன்று சந்திப்பு!. உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம்!

one hour call putin trump 11zon

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருவரும் இன்று (ஆக. 15) அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சந்தித்து பேச உள்ளனர்.


‘நேட்டோ’ எனப்படும், சர்வதேச ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்தது. இதில் உக்ரைன் இணைந்தால், தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து எனக்கூறி உக்ரைனுக்கு எதிராக, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகம், உணவுப்பொருள் வினியோகம், பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. போர் தொடர்வதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் சுமையாக உள்ளது. உக்ரைன் – -ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் உடன், ரஷ்ய அதிபர் புடின் சந்திப்புக்கு பின், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க ரஷ்ய அதிபர் புடின் ஒப்புக்கொண்டார். அதன்படி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் டிரம்ப் – புடின் இன்று சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர்.

Readmore: குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால் முழு அருளும் கிடைக்கும்..? முன்னோர்கள் சொன்னது என்ன..?

KOKILA

Next Post

இந்தியாவின் இந்த மாவட்டங்களில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் இல்லை..! 2 நாட்கள் கழித்து தான் கொண்டாடப்படுகிறது.. ஏன் தெரியுமா?

Fri Aug 15 , 2025
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த முறை நாடு தனது 79 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இன்று நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது.. ஆனால் இந்தியாவில் 2 மாவட்டங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை.. அதற்கு பதில் 2 நாட்களுக்குப் பிறகு அதாவது ஆகஸ்ட் 18 ஆம் தேதி […]
Independence day India aug 15

You May Like