பெரும் சோகம்…. தோர் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகரும், “ஆர்ஆர்ஆர்” படத்தின் வில்லன் நடிகருமான “ரே ஸ்டீவன்சன்” காலமானார்….

பிரபல ஹாலிவுட் மற்றும் அயர்லாந்து நடிகருமான ரே ஸ்டீவன்சன் 58 வயதில் காலமானார். இவர் பனிஷர்: வார் சோன், தி தியரி ஆஃப் ஃப்ளைட் மற்றும் எச்பிஓ மற்றும் பிபிசியின் பாராட்டப்பட்ட தொலைக்காட்சித் தொடரான ரோம் ஆகியவற்றில் ஸ்டீவன்சன் பிரபலமானார். டெக்ஸ்டர், தி வாக்கிங் டெட், பிளாக் சேல்ஸ், வைக்கிங்ஸ் மற்றும் பல ஸ்டார் வார்ஸ் அனிமேஷன் நிகழ்ச்சிகள் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்காகவும் அவர் பாராட்டப்பட்டார். மார்வெல்லின் தோர் பாகங்களிலும் வோல்ஸ்டாக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இந்திய சினிமாவின் பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த திரைப்படமான “ஆர்ஆர்ஆர்” படத்தில் வில்லனாக (கவர்னர் ஸ்காட்) நடித்து மிரட்டியிருப்பர்.


ரே ஸ்டீவன்சன் அடுத்ததாக டிஸ்னி+ ஸ்டார் வார்ஸ் தொடரான அஹ்சோகாவில் நடிக்கவுள்ளார், இது விரைவில் திரையிடப்படும். ஸ்டீவன்சன் கடைசியாக நடித்து வெளிவந்த படம் “ஆக்சிடென்ட் மேன்: ஹிட்மேன்ஸ் ஹாலிடே”. 1997 இல், ஸ்டீவன்சன் லண்டனில் ஆங்கில நடிகை ரூத் ஜெம்மலை திருமணம் செய்துகொண்டார். எட்டு வருட திருமணத்திற்குப் பிறகு 2005 இல் இருவரும் விவாகரத்து செய்தனர்.

ஸ்டீவன்சன் 21 மே 2023 அன்று தனது 58வது வயதில் இத்தாலியில் உள்ள இஷியாவில் “கேசினோ” படப்பிடிப்பின் போது இறந்தார். ரே ஸ்டீவன்சனின் திடீர் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியிடப்படவில்லை. இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

அடிதூள்..! வாட்ஸ் அப்பில் வந்த புதிய அப்டேட்... தவறான மெசேஜ்களை இனி எடிட் செய்யலாம்...!

Tue May 23 , 2023
வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை நிறுவனம் கொண்டு வர உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம். முதலில் […]
images 2023 05 23T063622.692

You May Like