திண்டுக்கலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் விளையாட சென்ற சிறுமிகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சுந்தரமகாலிங்கம் – சுமதி ஆகியோரின் மகள்கள் ஓச்சம்மாள் (11), தமிழ்செல்வி (10) உயிரிழந்ததாக கூறப்படுகிறது…
கிணற்றில் மிதந்த இரு சிறுமிகளின் உடல்கள் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதையடுத்து உடனடியாக காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்த சிறுமிகளின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.. இதையடுத்து காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிறுமிகளின் உடல்களை உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்..
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் உயிரிழந்தார்களா? அல்லது சிறுமிகளை யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது..
Read More : அடுத்த ஷாக்.. விசாரணை கைதி தற்கொலை.. பகீர் பின்னணி.. 2 பேர் பணியிடை நீக்கம்..