புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் மதன் பாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலுமகேந்திரா இயக்கிய நீங்கள் கேட்டவை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் மதன் பாப். குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் திறமையாக நடிக்கக்கூடியவர். அவரது தனித்துவமான சிரிப்பு மக்களிடம் கொண்டாடப்பட்டது. தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான “அசத்தப்போவது யாரு” என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்காற்றினார்.
71 வயதாகும் நடிகர் மதன் பாப், சில காலங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி, அடையாறில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மதன் பாப் மறைவிற்கு திரையுலகினர், பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More: நடிகை ரம்யாவுக்கு ரேப், கொலை மிரட்டல்.. 2 பேர் கைது.. மேலும் 11 பேரை தீவிரமாக தேடும் போலீசார்..