வடக்கு நைஜீரியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக பெயத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 117 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் தலைநகரான அபுஜாவிலிருந்து மேற்கே 180 மைல்கள் (300 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள நைஜர் மாநிலத்தில் உள்ள மோக்வா நகரில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. வடக்கு நைஜீரியாவில் உள்ள சமூகங்கள் நீண்டகால வறட்சியை அனுபவித்து வரும் நிலையில், காலநிலை மாற்றத்தால் அதிகப்படியான மழைப்பொழிவை ஏற்படுத்தியது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்வா நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை, வெள்ளத்தில் இதுவரை 117பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பலர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வட-மத்திய மாநிலத்தில் இரண்டு சமூகங்களில் சுமார் 3,000 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
இது குறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியதவாது, பெருவெள்ளத்தினால் ஏராளமான மக்களின் உயிர்கள் தற்போது அபாயத்தில் உள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது என்று கூறினார்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில், நைஜீரியா ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிக மோசமான வெள்ள அலையைச் சந்தித்தது. இது 600க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது, சுமார் 1.4 மில்லியன் மக்களை இடம்பெயர்ந்தனர் மற்றும் 440,000 ஹெக்டேர் விவசாய நிலங்களை அழிந்தன.
Readmore: உங்க பர்ஸில் மறந்து கூட இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்!. பணம் சேரவே சேராது!.