இந்தோனேசியாவில் தொழுகை நடந்துக்கொண்டிருந்தபோது திடீரென இஸ்லாமிய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளுக்குள் 65 மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள ஒரு இஸ்லாமியப் பள்ளியில் பகுதியளவு கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 65 மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, திங்கள்கிழமை (செப்டம்பர் 29, 2025) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் சிக்கிய பெரும்பாலான மாணவர்கள் 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள்.
மேலும் பலர் காயமடைந்தனர் மற்றும் ஏராளமான மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து, அப்பகுதியில் கட்டிட பாதுகாப்பு மற்றும் பள்ளி கட்டமைப்புகளுக்கான பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பியுள்ளது.