அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு 28-ம் தேதி குறைதீர்ப்பு முகாம்…! முழு விவரம் இதோ

post 2025

அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் 28.07.2025 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் 28.07.2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 28.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும், மின்னஞ்சல் (dochennaicitycentral@indiapost.gov.in) மற்றும் வாட்ஸ்-அப் (8939646404) மூலமாகவும் 23.07.2025-க்குள் அனுப்பலாம்.


அஞ்சலக காப்பீடுகள் விற்பனைக்கு பெண் முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு

அஞ்சலக ஆயுள் காப்பீடு/ ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் விற்பனைக்கு நேரடி முகவர்களை ஈடுபடுத்துதல் மற்றும் பட்டியலிடுவதற்கான நேர்முகத் தேர்வு ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகத்தில் 26.07.2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும். விருப்பமுள்ள, சந்தை அனுபவமுள்ள, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் பெண் தேர்வர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

தகுதிகள்: 10-ம் வகுப்பு தேர்ச்சி, வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும்.‌இந்த முகவர்களுக்கு அஞ்சல் துறையிலிருந்து ஊதியம் வழங்கப்படமாட்டாது. அவர்களின் செயல்திறனுக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். ஆர்வமுள்ள பெண் தேர்வர்கள் தங்களின் சுய விவர குறிப்பு மற்றும் வயது, கல்வி, அனுபவம் ஆகியவற்றின் மூல சான்றுகளுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

Vignesh

Next Post

#Breaking : கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

Sat Jul 19 , 2025
கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க முத்து.. மு.க. முத்துவின் தாயார் பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார். பல திரைப்படங்களில் நடித்துள்ள மு.க முத்து, சிறந்த பாடகராகவும் இருந்தார். 1970களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, […]
fd653032cc0c71097c1948babe72275a 1

You May Like