ஜிஎஸ்டி குறைப்பு!. புற்றுநோய் உள்ளிட்ட 33 உயிர்காக்கும் மருந்துகள் மலிவாகக் கிடைக்கும்!. முழு லிஸ்ட் இதோ!

cancer tablet warning 11zon

சுமார் 375 பொருட்களுக்கான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருவதால், சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை இன்று முதல் விலை குறையும். அந்தவகையில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு அரசு மிகப்பெரிய ஜிஎஸ்டி குறைப்பை அறிவித்துள்ளது.


“புற்றுநோய், அரிய நோய்கள் அல்லது கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று உயிர்காக்கும் மருந்துகள் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளன. பல மருந்துகள் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன” என்று 56வது GST கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கூறினார்.

விலை குறைக்கப்பட்ட 33 மருந்துகளின் பட்டியல்: Onasemnogene abeparvovec,

Asciminib,

Mepolizumab,

Pegylated Liposomal Irinotecan,

Daratumumab,

Daratumumab subcutaneous,

Teclistamab,

Amivantamab,

Alectinib,

Risdiplam,

Obinutuzumab,

Polatuzumab vedotin,

Entrectinib,

Atezolizumab,

Spesolimab,

Velaglucerase Alpha,

Agalsidase Alfa,

Rurioctocog Alpha Pegol,

Idursulphatase,

Alglucosidase Alfa,

Laronidase,

Olipudase Alfa,

Tepotinib,

Avelumab,

Emicizumab,

Belumosudil,

Miglustat,

Velmanase Alfa,

Alirocumab,

Evolocumab,

Cystamine Bitartrate,

CI-Inhibitor injection,

Inclisiran.

புற்றுநோய், அரிய வகை நோய்கள், மிகவும் தீவிர பாதிப்பிற்கு ஆளான நாள்பட்ட நோய்கள் ஆகியவற்றுக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீத ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு வரி ஏதும் இல்லை.உயிர் காக்கும் மருந்துகள் தவிர்த்து இதர அனைத்து மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரியானது 12 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மெடிக்கல் கிரேடு ஆக்சிஜன், டயக்னாஸ்டிக் கிட்ஸ், ரீகண்ட்ஸ், குளுகோமீட்டர், டெஸ்ட் ஸ்ட்ரைப்ஸ், கண் கண்ணாடி உள்ளிட்டவற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைத்துள்ளனர். அழகுசாதனப் பொருட்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சி உபகரணங்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ஜிம்கள், சலூன்கள், பார்பர்கள், யோகா மையங்களில் பயன்படுத்தும் பொருட்களுக்கு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

Readmore: அரைசதம் அடித்ததும் பாக். தொடக்க ஆட்டக்காரர் பர்ஹான் செய்த “துப்பாக்கிச்சூடு” செயல்!. இந்தியர்கள் கொந்தளிப்பு!. வைரல் வீடியோ!

KOKILA

Next Post

கனவு நனவான 10 நாளில் விபத்தில் பலியான இளம் ஆசிரியை.. பெரும் சோகம்..!

Mon Sep 22 , 2025
A young teacher died in an accident 10 days after getting a government job.. A great tragedy..!
accident

You May Like