பாஜக தலைமையிலான குஜராத் அரசு, கிரிக்கெட் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா உட்பட 26 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை இன்று அறிவித்தது. முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர ஒட்டுமொத்த அமைச்சரவையும் நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
ரிவாபா ஜடேஜாவைத் தவிர, ஸ்வரூப்ஜி தாக்கூர், பிரவென்குமார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்ஷ்னா வகேலா, குன்வர்ஜி பவாலியா, அர்ஜுன் மோத்வாடியா, பர்ஷோத்தம் சோலங்கி, ஜிதேந்திர வகானி, பிரஃபுல் பன்ஷேரியா, ஹர்ஷ் சங்வி, கனுபாய் தேசாய் ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2027 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக “மூலோபாய மறுசீரமைப்பு தேவை என்பதால் முதல்வர் மற்றும் கட்சித் தலைமைக்கு சுதந்திரம் அளிக்க, வியாழக்கிழமை பிற்பகலுக்குள் அமைச்சர்கள் தங்கள் ராஜினாமாக்களை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்..வியாழக்கிழமை அவர்கள் ராஜினாமா செய்த பிறகு, முதல்வர் அவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாகவும், அவர்கள் தங்கள் பதவிகளை காலி செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
படேலின் தற்போதைய முந்தைய அமைச்சர்கள் குழுவில் எட்டு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள், 2 இணையமைச்சர்கள் (சுயாதீனப் பொறுப்பு) மற்றும் 6 இணையமைச்சர்கள் அடங்குவர். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் படேல் வியாழக்கிழமை மாலை சந்தித்து புதிய அமைச்சர்களின் பட்டியலை சமர்ப்பித்தார். புதிய அமைச்சரவை இன்று மதியம் பதவியேற்றுக் கொண்டது.
குஜராத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ:
பூபேந்திர ரஜினிகாந்த் படேல்
திரிகம் பிஜல் சாங்கா
ஸ்வரூப்ஜி சர்தார்ஜி தாக்கூர்
பிரவென்குமார் மாலி
ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல்
பிசி பாரண்டா
தர்ஷனா எம் வகேலா
கந்தரதலால் சிவலால் அம்ருதியா
குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா
ரிவாபா ரவீந்திரசிங் ஜடேஜா
அர்ஜுன்பாய் தேவபாய் மோத்வாடியா
டாக்டர் பிரத்யுமன் வாஜா
கௌசிக் காந்திபாய் வேகரியா
பர்ஷோத்தம்பாய் ஓ. சோலங்கி
ஜிதேந்திரபாய் சவ்ஜிபாய் வகானி
ராமன்பாய் பிகாபாய் சோலங்கி
கமலேஷ்பாய் ரமேஷ்பாய் படேல்
சஞ்சய்சிங் ராஜசிங் மஹிதா
ரமேஷ்பாய் பூராபாய் கட்டாரா
மனிஷா ராஜீவ்பாய் வக்கீல்
ஈஸ்வர்சிங் தாகோர்பாய் படேல்
பிரஃபுல் பன்சேரியா
ஹர்ஷ் சங்வி
டாக்டர் ஜெய்ராம்பாய் செமாபாய் கமித்
நரேஷ்பாய் மகன்பாய் படேல்
கனுபாய் மோகன்லால் தேசாய்
2021 ஆம் ஆண்டு மறைந்த விஜய் ரூபானிக்குப் பதிலாக முதலமைச்சராகப் பதவியேற்ற பூபேந்திர படேல், 2022 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்ற பிறகு, நடைபெறும் முதல் பெரிய அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.



