பிளானை மாற்றிய குணசேகரன்.. பளார் விட்ட சக்தி.. திக் திக் கதைக்களத்துடன் எதிர்நீச்சல் தொடர்கிறது..!

edhirneechal 1

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போதைய கதைக்களத்தை பொறுத்தவரை தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜீவானந்தம் மற்றும் ஜனனியும் போராடி வருகிறார்கள். தர்ஷனுக்கு ஈஸ்வரி ஆசைப்பட்டது போல் எப்படியாவது பார்கவியுடன் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என ஜனனி, நந்தினி, ரேணுகா போராடுகிறார்கள்.


அறிவுக்கரசி தனது தங்கையுடன் தான் திருமணம் நடக்க வேண்டும் என அவர் ஒரு பிளான் போடுகிறார். குணசேகரன் ஈஸ்வரியை தாக்கும் வீடியோவை வைத்து ஒரு நபர் அறிவுக்கரசியிடம் டீல் பேசுகிறார், அவரும் எதுவும் செய்ய முடியாமல் பணத்தை ஏற்பாடு செய்கிறார். முல்லை வேந்தன் நந்தினியை பார்த்து காதல் ததும்ப சக்தியிடம் பேச பளார் என ஒரு அறை விடுகிறார்.

இதற்கிடையே காலையில் முகூர்த்த நேரம் 4 மணிக்கு என சொல்கிறார் குணசேகரன். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். சக்தி, ரேணுகா மற்றும் நந்தினியும் இந்த ட்விஸ்டை எதிர்பார்க்காததால், தர்ஷனை எப்படி வெளியே அழைத்துச் செல்வது என பிளான் போடுகிறார்கள். 4 மணிக்குள் பார்கவியை ஜனனி அழைத்து வருவது முடியாத காரியம் என்பதால், தர்ஷனை மண்டபத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்வதே ஒரே வழி.

இதனால் அவரை எப்படி வெளியே அழைத்து செல்லப் போகிறார்கள் என்பது தான் கேள்வியாக உள்ளது. இந்த சிக்கல்களுக்கு இடையே தர்ஷனுக்கு பார்கவியுடன் திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Subscribe to my YouTube Channel

Read more: அதிரடி!. வெளிநாட்டு மருந்துகளுக்கு 100% வரி விதித்த டிரம்ப்!. அக்.1 முதல் அமல்!. உலக பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு!.

English Summary

Gunasekaran changed the plan.. Balaar gave up the power.. The counter-swim continues with the Tik Tik storyline..!

Next Post

பாட்டிலுக்கு ரூ.10 வீதம் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி டாஸ்மாக்கில் ஊழல்....! இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு...!

Fri Sep 26 , 2025
பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வழக்குகள் அதிகரித்துவிட்டன என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேசிய அவர்; அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் […]
Eps

You May Like