எதிர்நீச்சல் சீரியல் நேற்றைய எபிசோடில் நடந்த காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் மற்றும் பார்கவி இருந்த அறைக்கே திடீரென அன்புக்கரசி வருகிறார். அந்த நேரம், துணியை எடுக்க உள்ளே வந்திருந்த தர்ஷனை நோக்கி அன்புக்கரசி, “இதே ரூமில், இதே படுக்கையில் நீயும் நானும் எத்தனை நாட்கள் ஒன்றாக இருந்தோம்… அதை மறந்துட்டியா?” என சொல்கிறாள்.
இதைக் கேட்ட பார்கவி அதிர்ச்சியில் உறைந்து போக, தர்ஷன் உடனே, “என்ன பேசுற, ஏன் பொய் சொல்றே?” என ஆவேசமாகக் கூறுகிறார். அதற்கு அன்புக்கரசி, “நான் ஒன்றும் பொய் சொல்லவில்லை, நீ மறந்துட்ட” என்கிறாள். இதைக் கேட்ட தர்ஷன் கோபத்தில் அவளது கழுத்தைப் பிடிக்கிறார். இதைக் கண்டு அனைவரும் ஓடி வந்து தடுக்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்த பார்கவி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறாள். இதே சமயம், ஜனனி – நந்தினி இடையே வீடியோ குறித்து நடந்த உரையாடலும் ரசிகர்களுக்கு புதிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. “அந்த வீடியோ இல்லாமல் இவர்களை அடக்க முடியாது. ஆனால் அந்த வீடியோ கொடுப்பதாகச் சொன்னவன் எங்களை ஏமாற்றிவிட்டான்” என ஜனனி கூற, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், நாளைய எபிசோட்டுக்கான புரோமோவில் ராமேஸ்வரத்தில் இருந்து குணசேகரன் வீடு திரும்புகிறார். அவரைக் கண்டு விசாலாட்சி கண்கலங்கிச் “நீ இல்லாம வீடு வீடாகவே இல்லை” என உருக்கமாகச் சொல்கிறாள். அதற்கு குணசேகரன், “சில விஷயங்களை தனியாக இருந்தால்தான் முடிவு செய்ய முடியும்” என பதிலளிக்கிறார்.
அப்பொழுது அன்புக்கரசியை பார்த்து “நீ இங்கே எதற்காக வந்தாய்?” என கேட்க, முல்லை தலையிட்டு, “அறிவுக்கரசி உங்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை மறந்திடாதீர்கள். இப்ப கூட அறிவுக்கரசி உங்களைப்பற்றி சொன்னால் உங்களுடைய நிலைமை என்ன ஆகும், ஆனால், அறிவு உங்களைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கு” என எச்சரிக்கிறார். இதன் மூலம் அடுத்த எபிசோடில் அறிவுக்கரசியின் திட்டம் என்ன? காணாமல் போன வீடியோ யாரிடமிருக்கிறது? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.



