Happy Birthday MS Dhoni| கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள்!.

ms dhoni birthday 11zon

கிரிக்கெட் விளையாட்டின் அசகாய சூரன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு வயது 44. ராஞ்சியில் இருந்து தன் கனவை தேடி புறப்பட்டு வந்த தோனி, பின்னாளில் கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை மெய்ப்பிக்க செய்தார். இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். இன்றளவும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார் தோனி.


கிரிக்கெட் விளையாடும் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தோனிதான் சென்னையின் அடையாளம். தமிழ்நாட்டின் பட்டிதொட்டிதோறும் தோனியின் முகம் மிகப் பிரபலம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் தோனி.

கிரிக்கெட் உலகில் அவர் பறக்கவிடும் சிக்ஸர்கள் வேறு ரகம். அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்து சொல்லவே வேண்டாம். அவர் அடித்து பறக்கவிடும் பந்தோடு சேர்ந்து ரசிகர்களின் நெஞ்சங்களும் ‘சிக்ஸ் போகணும்’ என பறக்கும். அந்த அளவிற்கு தனது ஆட்டத்திறனால் ரசிகர்களை கட்டிப்போடும் காந்த சக்தியை தன்னகத்தே கொண்டவர்.

சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் அணியில் இணைவதற்கு முன்பு தோனி கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் செக்கராக பணியாற்றி வந்தார். கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தோனிக்கு வைத்திருந்த நீண்ட முடி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. டிசம்பர் 2005ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக இலங்கைக்கு எதிராக களமிறங்கினார். ஒரு வருட காத்திருப்புக்கு பிறகு தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியில் விளையாடினார்.

தோனி தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை டிசம்பர் 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக பதிவு செய்தார். ஏப்ரல் 2008ல் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கினார். அந்த ஆண்டு நவம்பரில் தோனி முதல் முறையாக டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்புகளை கையாண்டார். 2009 டிசம்பரில் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் அணியில் நம்பர் ஒன் இடம் பிடித்தது. பிப்ரவரி 2013 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை விளாசினர். ஒருநாள் போட்டிகளில், இந்தியாவை அதிக போட்டிகளுக்கு (200) வழிநடத்தியவர். இந்திய அணிக்கு அதிக டி20 போட்டிகளுக்கு (72) கேப்டனாகவும் தோனி இருந்துள்ளார்.

2014 டிசம்பரில் இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தோனி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே தொடரிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். 2017 ஜனவரியில் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை தோனி ராஜினாமா செய்தார். ஐபிஎல்லில், தோனி முதலில் ஏப்ரல் 2008 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்கு எதிராக விளையாடினார். ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் (264) பங்கேற்றவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

250 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தோனி வசம் உண்டு. ஒரு அணியை அதிக ஐபிஎல் போட்டிகளில் (226) வழிநடத்திய பெருமையையும் கொண்டுள்ளார். ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்றதன் மூலம், தோனி ரோகித் சர்மாவுடன் இணைந்து போட்டியில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் ஆக உள்ளார். 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை, தோனி தலைமையில் சென்னை வென்றது. 2007ஆம் ஆண்டு இந்திய அணி முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்றது.

2011ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் இந்திய அணி இரண்டாவது ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் இந்தியா வென்றது. மூன்று ஐசிசி போட்டிகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளில் (829) பங்காற்றிய மூன்றவது வீரர். ஒட்டுமொத்தமாக தோனி கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் அதிக எண்ணிக்கையிலான ஸ்டம்பிங் (195) செய்துள்ளார். 2007 இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை (தற்போது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படுகிறது) பெற்றார்.

2009 ஆம் ஆண்டு தோனிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. தோனி 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாக்ஷி சிங்கை மணந்தார். தோனியும் சாக்ஷியும் பிப்ரவரி 6, 2015 அன்று ஜீவா என்ற பெண் குழந்தையை பெற்றனர். இந்திய பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவ பதவியை டோனி பெற்றுள்ளார். தோனி ஒரு தகுதி வாய்ந்த பராட்ரூப்பர் ஆவார். 2019 ஆம் ஆண்டில் தோனி பாராசூட் ரெஜிமென்ட்டுடன் இரண்டு வார பயிற்சி மேற்கொண்டார். தோனி பைக்குகள் மீது ஆர்வம் கொண்டவர், மேலும் ஏராளமான மாடல் பைக்குகளை சேகரித்துள்ளார். புகழ்பெற்ற இந்திய கேப்டன் சமீபத்தில் ஜாவா 42 பாபர் வாங்கினார்.

2023 ஆம் ஆண்டில் தோனி ஒரு மெர்சிடிஸ்-ஏஎம்ஜி 632 எஸ்யூவியுடன் தனது கேரேஜை விரிவுபடுத்தினார். தோனிக்கு கிஷோர் குமாரின் பாடல்கள் மற்றும் பழைய கிளாசிக்கல் இசையைக் கேட்பது மிகவும் பிடிக்கும். தோனிக்கு கிரிக்கெட் தவிர WWE மற்றும் கால்பந்தையும் போன்ற விளையாட்டுகளும் பிடிக்கும். தோனி ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில், தோனி கடைசியாக 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். தோனியின் ஜெர்சி எண் 7க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது. அதுவும் இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடித்து தோனி அந்த வெற்றியை இந்தியாவிற்கு பெற்றுத்தந்தார். இதன் மூலம் சிறந்த ஃபினிஷர் என்ற பெயரையும் அவர் பெற்றார். இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் சென்னையின் அணியின் கேப்டனான விளையாடி, கோப்பைகளை வென்றதால் அவருக்கு தமிழகத்தில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருந்தது. 

ஒரு கட்டத்தில் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றிகளை வாரிக்குவிக்க துவங்கியது. அவரது கேப்டன்ஷிப் வியூகம் எப்படிபட்ட அணியையும் வீழ்த்தும் சூட்சமத்தை கொண்டிருந்தது. அது தான் இன்றும் அவர் அணியில் இருக்க காரணம். தற்போது அவரை ஓய்வு பெற வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கின்றனர்.

ஆனால் ‘என்றுமே தல தோனி’ தான் எனக் கோடிக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்பதே உண்மை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக வெறித்தனமான ரசிகர்களை கொண்ட ஒரு வீரர் என்றால் அது தோனிதான். 

Readmore: வரலாறு படைத்தது கில் படை!. 58 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!.

KOKILA

Next Post

2026 சட்டமன்ற தேர்தல்... மதிமுக 25 தொகுதிகளில் போட்டியா...? கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு...!

Mon Jul 7 , 2025
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறிவருவது திமுக தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூட்டணி கட்சியில் இருந்து விலகி வருபவர்களை திமுகவில் சேர்ப்பதில்லை என்ற கொள்கையில் இருந்து விலகி, மதிமுக நிர்வாகிகளை சமீபத்தில் […]
vaiko

You May Like