அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. அடுத்தடுத்து குட் நியூஸ் தரும் தமிழக அரசு..!! வேற மாறி அறிவிப்புகள்..

govt job stalin

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில், மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 209 பெண் காவலர்கள் தங்களது குழந்தைகளை நலமாக கவனிக்கும்படி தாங்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான மாற்றம் 03.06.2025க்குள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக வெளியிட்ட அறிவுப்புகளை பின்வருமாறு பார்க்கலாம்.

அரசு ஊழியர்களுக்காக ஒரு மாதத்தில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

* ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு அரசு ஊழியர்களுக்காக கட்டணமின்றி வழங்கப்படும். இது இந்தியாவில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்.

* டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு.

* அகவிலைப்படி 2% உயர்வு – மத்திய அரசு ஊழியர்களைப் போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அறிவிப்பு.

* அரியர் தொகை வழங்கல் – ஜனவரி முதல் மார்ச் 2024 வரையிலான 3 மாதங்களுக்கு ரூ.1,080 வரையிலான தொகை.

* பண்டிகைக் கால முன்பணம் – அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 ஆக உயர்வு.

* கல்வி முன்பணம் – தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000.

* திருமண முன்பணம் – ரூ.5 லட்சம் வரை.

* ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசு மற்றும் பண்டிகை முன்பணம் – முறையே ரூ.1,000 மற்றும் ரூ.6,000 ஆக உயர்வு.

* மகப்பேறு விடுப்பு – இப்போது தகுதிகாண் பருவத்திலும் (Probation period) சேர்த்துக் கணக்கிடப்படும்.

Read more: தொழில் செய்யும் நபரா நீங்கள்…? 60 % மானியம் வழங்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்…! முழு விவரம்


Next Post

உச்சக்கட்ட போர் பதற்றம்!. ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு!.

Mon Jun 16 , 2025
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் , ஈரானில் உள்ள இந்திய தூதரகம் பல உதவி எண்களை வெளியிட்டுள்ளது மற்றும் தற்போது ஈரானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பு கொள்வதற்காக ஒரு டெலிகிராம் இணைப்பையும் உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் […]
iran war helpline

You May Like