Flash : ஹேப்பி நியூஸ்.. ஒரே நாளில் ரூ.880 குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி..

gold jewlery

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்திலும் திங்கள், செவ்வாய் என 2 நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தது.. பின்னர் மீண்டும் உயர்ந்த நிலையில், விஜயதசமி நாளான நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. ஆனால் மாலையில் விலை உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.110 குறைந்து, ரூ.10,840க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ. 86,720க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சரசரவென குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.161க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,61,000 விற்பனையாகிறது.

Read More : தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சார்பில் போட்டி… மாணவர்களுக்கு ரூ.10,000 வரை பரிசுத்தொகை…!

English Summary

Jewelers are relieved as the price of gold in Chennai has dropped by Rs. 880 per sovereign today.

RUPA

Next Post

நீரிழிவு நோயாளிகளுக்கான மார்னிங் சீக்ரெட்.. இதை செய்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்..!!

Fri Oct 3 , 2025
Morning Secret for Diabetics.. If you do this, your blood sugar levels will be under control..!!
diabetes

You May Like