#Flash : ஹேப்பி நியூஸ்.. இன்றும் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்…

gold jewelry reflective surface 640852 1749

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது.. அதன்படி ஒரு சவரனுக்கு ரூ. 1,000 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை, ரூ. 45 குறைந்து ரூ.9,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 360 குறைந்து ஒரு சவரன் ரூ.73,680 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளதால் நகைப்பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி!. நாட்டின் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பெருமையை பெற்றார்!.

RUPA

Next Post

Flash: அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. 4 மாணவர்கள் பலி.. மேலும் அதிகரிக்க வாய்ப்பு..!!

Fri Jul 25 , 2025
Accident as roof of primary school collapses in Rajasthan..
Rajasthan school roof collapse 1

You May Like