Flash : ஹேப்பி நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

gold new

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ரூ.1,120க்கு விற்பனையானது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 குறைந்து, ரூ.11,270க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : நவ.15ஆம் தேதிக்கு பிறகு..!! மீண்டும் தீவிரமாக தொடங்கும் வடகிழக்கு பருவமழை..!! வானிலை மையம் பரபரப்பு தகவல்..!!

RUPA

Next Post

செல்லப்பிராணி வளர்ப்பவரா நீங்கள்..? வீட்டிற்கே வரும் அதிகாரிகள்.. இதைச் செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம்..!

Fri Nov 7 , 2025
Are you a pet owner? Officials will come to your home. If you don't do this, you will be fined Rs. 5,000!
dog corporation

You May Like