“என்ன செய்யுறதுனே தெரியல.. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க” என்ற வார்த்தைகளை நம்மில் பலரும் ஒருமுறையேனும் கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம். வேலைகள் பறிபோகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், குடும்பத்தில் சண்டைகள் வெடிக்கும், உறவுகளில் விரிசல் ஏற்படும், தேவையில்லாத பயம், தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், “யாரோ செய்வினை வெச்சிருக்காங்க” என்று தான் நினைக்க தோன்றும்.
மற்றவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து, கெட்டதே நடந்து கொண்டிருக்கும். ஆனால், எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டால் பில்லி, சூனிய கோளாறுகள் இருப்பதாக அர்த்தம் என்பது உங்களுக்கு தெரியுமா..?
* மனநிலை, உடல்நிலை, வாழ்க்கைச் சூழ்நிலை எல்லாம் ஒரே நேரத்தில் கீழே போவதை உணர்வீர்கள். முன்னால் நன்றாக சென்று கொண்டிருந்த செயல்கள் எல்லாம் திடீரென்று தடுமாறும்.
* இரவில் சரியாகத் தூங்க முடியாது. மோசமான கனவுகள், தூக்கத்தில் பேசுதல், பயத்தோடு விழித்தெழுதல் ஆகியவை இருக்கும்.
* மருத்துவ பரிசோதனையில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் சொன்னாலும் உடல் வலி, மனசோர்வு, பலவீனம், அடிக்கடி சளி, காய்ச்சல் போன்றவை இருக்கும்.
* வருமானம் இருந்தும் கையில் பணம் தங்காது. கடன்களில் சிக்கித் தவிக்கும் சூழல் உருவாகும்.
* வீடு முழுவதும் விசித்திரமான வாசனை, விபரீத ஒலி, பொருட்கள் தானாகவே விழுவது, பூஜை பொருட்கள் வாடுதல், நாய் பூனை அவ்வப்போது ஒரே நேரத்தில் அலறுவது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.
* குடும்ப உறுப்பினர்கள் இடையே அடிக்கடி சண்டை, மன அழுத்தம், சமாதானமற்ற சூழல் உருவாகும்.
Read More : குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம் தெரியுமா..? கடைசியா நீங்க எப்போ போனீங்க..?