தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதோ..!

gold necklace from collection jewellery by person 1262466 1103

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ..74,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த வாரத்தில் ரூ.1300க்கு மேல் குறைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ரூ.800 உயர்ந்தது.. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்..

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.9,305-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.80 குறைந்து, ரூ..74,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.131-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,31,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RUPA

Next Post

தமிழகத்தில் செப்.5 பொது விடுமுறை.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Mon Aug 25 , 2025
September 5th public holiday in Tamil Nadu.. Government official announcement..!!
Holiday 2025

You May Like