EMI-இல் ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் தவணை செலுத்தவில்லை என்றால், அவர்களின் போன்கள் ரிமோட் மூலம் லாக் செய்யும் அதிகாரம் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் வழங்கப்படலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளின் நேர்மையான நடைமுறைகள் குறியீட்டை (Fair Practices Code) திருத்த உள்ளதால், இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. கடன் தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த புதிய நடைமுறைக்கு நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்கும்போதே ஒப்புதல் அளிக்க வேண்டும். நீங்கள் EMI மூலம் போன் வாங்கும்போது, ஒரு செயலி உங்கள் போனில் நிறுவப்படும். அதை நீக்க முடியாது. நீங்கள் தவணை செலுத்தத் தவறும் பட்சத்தில், அந்த செயலி உங்கள் போனை லாக் செய்யும். பிறகு, அத்தியாவசியமான அவசரகால அழைப்புகளைத் தவிர, வேறு எந்தச் செயல்பாடுகளையும் நீங்கள் செய்ய முடியாது.
தற்போது, கூகுள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் குறிப்பிட்ட செயலிகள் மூலம் இந்த வசதி செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும்போது, அனைத்து வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் இந்த வசதியை பயன்படுத்த முடியும். கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை இந்த லாக் நீக்கப்படாது.
கடன் தவணை செலுத்தாத ஒருவரிடம் இருந்து நேரடியாக சாதனத்தை பெறுவது வங்கிகளுக்குச் சிரமமானது என்பதால், இந்த மென்பொருள் மூலம் தண்டிப்பது ஒரு எளிதான வழியாகும். இது எதிர்காலத்தில் கார்கள், டிவிக்கள், கணினிகள், மின்சார வாகனங்கள் போன்ற பிற சாதனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய விதிமுறைகள் நுகர்வோர் மத்தியில், EMI மூலம் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்குவது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால், EMI மூலம் ஸ்மார்ட்போன் விற்பனை குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது, கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களிடமிருந்து வெளிப்படையான ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக இருக்கும்.
Read More : கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவன்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!