தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பலரும் வாழ்ந்து வரும் நிலையில், மருத்துவச் செலவுகளுக்காக மாதந்தோறும் ஒரு தொகையை சேமித்தும் வருகின்றனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் ரூ.5 லட்சம் வரையில் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. ஒருவருடைய வருமானத்தைப் பொருட்படுத்தாமல் இந்தத் திட்டம் அனைவருக்கும் உதவியாக இருக்கிறது. இதுவரை நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், 24,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லாமல் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்கள், எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி..?
* முதலில், www.pmjay.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* அங்கு, புதிய மூத்த குடிமகன் பதிவு செய்வதற்கான பக்கத்திற்கு செல்லவும்.
* விண்ணப்பதாரர் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், இணையதளம் மூலம் முக அங்கீகாரச் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தலாம்.
* அவ்வாறு இல்லையென்றால், அருகில் உள்ள பொது சேவை மையம், PM-JAY கியோஸ்க் அல்லது திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு மருத்துவமனைக்கும் சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை ஆகியவை அவசியம்.
Read More : Just Now | இனி பனை மரம் வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!