உங்க வீட்டை தெற்கு பார்த்த திசையில் கட்டியுள்ளீர்களா?. நல்லதா?. கெட்டதா?. தெரிஞ்சுக்கோங்க!.

house vastu 11zon

பொதுவாக ஒரு வீட்டிற்கு குடியேறும் முன்போ அல்லது வீட்டை வாங்கும் முன்போ, அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்பதைப் பார்த்தே எதுவும் செய்வோம். ஏனெனில் நல்ல வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள். அதிலும் சிலர் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கியுள்ளது என்பதையும் பார்ப்பார்கள். அதில் தெற்கு பக்க வீடு என்றாலே வேண்டாம் சாமி என்பார்கள். கிழக்கும், வடக்கும் தான் ராசியான வீடுகள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படி சிலர் காரணம் தெரியாமலேயே புறக்கணிப்பதால், தெற்கு பக்க வீட்டில் குடிப்புகுவதற்கு பலர் அஞ்சுகிறார்கள். ஆனால் தெற்கு பார்த்த வீட்டை ஒதுக்குவது உண்மையிலேயே சரிதானா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். இதற்கு காரணம் தெற்கு நோக்கிய வீடு சரியான வாஸ்து சாஸ்திரத்தில் அமைந்திருப்பது தான். எனவே நீங்கள் தெற்கு பார்த்த வீட்டில் இருப்பவரானால், வீட்டில் செல்வமும், ஆரோக்கியமும் மேம்பட கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வாஸ்து டிப்ஸ்களைப் படித்து பின்பற்றுங்கள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு பார்த்த வீட்டில் சமையலறையானது தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் வடமேற்கு திசையிலாவது அமைந்திருக்க வேண்டும். இதனால் அந்த வீடு சிறப்பாகவும் புனிதமாகவும் இருக்கும். தெற்கு திசை பார்த்த வீட்டில் இருக்கும் படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருப்பது நல்லது. இந்த திசையில் படுக்கும் அறை அமைந்திருந்தால் தான், அதீத நன்மையைப் பெற முடியும். முக்கியமாக இப்படி அமைந்தால், மன அமைதி அதிகரிக்கும்.

தெற்கு பக்க வீடு இன்னும் சிறப்பாக இருக்க, வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு பக்க சுவர், வடக்கு பக்க சுவரை விட உயரமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். இதனால் தெற்கு பக்க வீட்டின் உண்மையான பலனைப் பெறலாம்.தெற்கு பக்க வீட்டில் கார் செட், தோட்டம், செப்டிக் டேன்க் போன்றவை, அந்த வீட்டில் தென்மேற்கு திசையில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக வீட்டின் தெற்கு பகுதியை விட வடக்குப் பகுதி காலியாக இருக்க வேண்டும்.

தெற்கு வாசல் கொண்ட வீட்டில் கிணறு எந்த பக்கத்தில் இருக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? கட்டாயம் கிணறு, குளம் போன்றவற்றை வீட்டின் தெற்கு பகுதியில் அமைக்கக்கூடாது. தெற்கு பக்க வாசல் கொண்ட வீட்டில், மரங்களை வடகிழக்கு பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் மாடி படிக்கட்டுகளை வடகிழக்கு பகுதியில் அமைக்கக்கூடாது. எனவே இதில் மிகவும் கவனமாக இருங்கள்.

Readmore: மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் புதிய மருந்து.. பக்க விளைவுகள் கிடையாது..!! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

KOKILA

Next Post

2026 சட்டமன்றத் தேர்தல்... திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு...!

Sun Jun 8 , 2025
மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல […]
MK Stalin dmk

You May Like