2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை (ITR) தாக்கல் செய்த பலர், செப்டம்பர் 15 என்ற நீட்டிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குமுன்பே தாக்கல் செய்திருந்தாலும், refund பணம் இன்னும் வராததால் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் வரித்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் பின்வருமாறு:
தாமதத்திற்கான காரணங்கள்:
E-Verification செய்யாதது: ITR தாக்கல் செய்ததும், அதை 30 நாட்களுக்குள் e-verify செய்ய வேண்டும். ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது கையொப்பமிட்ட ஒப்புகைச் சீட்டை பெங்களூரு CPC-க்கு அனுப்புதல் வழிகளில் செய்யலாம். சரிபார்ப்பு செய்யாவிட்டால், ITR செல்லாது என கருதப்பட்டு refund தடைப்படும்.
செயலாக்க தாமதம்: ITR e-verify செய்யப்பட்டிருந்தாலும், CPC-யில் செயல்முறை முடிந்த பின்பே பணம் திருப்பி வழங்கப்படும்.
வங்கி விவர பிழைகள்: வங்கிகள் இணைப்பு (merger), IFSC மாற்றம் போன்ற காரணங்களால் தவறான கணக்கு விவரங்கள் இருந்தால், refund தடைப்படும். இதற்கான எச்சரிக்கை மின்னஞ்சல் வரித்துறையிலிருந்து வரும்.
“My Bank Details” பகுதியில் தகவலைப் புதுப்பித்து, “Refund Reissue” கோரிக்கை வைக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள வரிக் கடன்: முந்தைய ஆண்டுகளின் நிலுவைகள் இருந்தால், அவற்றுக்கு எதிராக refund தொகை சரிசெய்யப்படும். “Pending Actions” பகுதியில் இதைச் சரிபார்க்கலாம்.
TDS பொருந்தாமை: ITR-ல் குறிப்பிடப்பட்ட TDS, Form 26AS அல்லது AIS-இல் உள்ள விவரத்துடன் பொருந்தாவிட்டால், refund நிறுத்தப்படும். முரண்பாடு இருந்தால் CPC-க்கு புகார் அளிக்க வேண்டும்.
வரித்துறையின் புதிய நடவடிக்கை: தவறான deduction claims செய்தவர்களை குறிவைத்து, நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு notice அனுப்பப்பட்டுள்ளது. சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியதாகக் கூறி விலக்கு கேட்டவர்களின் ஆவணங்கள் தீவிரமாக விசாரிக்கப்படும். பிரிவு 80D, 80DDB (மருத்துவ செலவுகள்), 10(13A) (HRA), 80E/80EE/80EEB (கல்விக் கடன், வீட்டு கடன், வாகன கடன்) போன்றவற்றில் கோரப்பட்ட விலக்குகளும் விசாரணைக்குட்படுகின்றன.
வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை: வரித்துறை, வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கத்தில் இந்த சோதனைகளை மேற்கொள்கிறது. தவறான தகவல் கொடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வரி செலுத்துவோர் தங்களின் ITR தாக்கல் மற்றும் விலக்கு கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் செய்வது அவசியம்.
மொத்தத்தில், refund தாமதம் ஏற்பட்டால் பீதி அடையாமல், ITR portal-ல் login செய்து “Grievance/Complaint” பதிவு செய்வது மற்றும் வங்கி விவரங்கள், TDS, நிலுவைச் சிக்கல்கள் அனைத்தையும் சரிபார்ப்பது முக்கியம்.