ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஒரு பள்ளி ஆசிரியைக்கும் அதே பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ள உறவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அந்த ஆசிரியை, பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட ஒரு முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த மாணவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்துகளும், சந்திப்புகளும் நடந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புகளின்போது, ஆசிரியை மாணவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களின் தனிப்பட்ட உறவு, சில காலம் ரகசியமாக நீடித்து வந்துள்ளது.
ஆனால், இந்த விவகாரம் விபரீதமான திருப்பத்தை அடைந்தது. ஆசிரியையுடன் தனிமையில் இருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களை அந்த முன்னாள் மாணவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர், இந்த வீடியோவை அவர் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 மாணவர்கள் அடங்கிய ஒரு குழு, அந்த வீடியோவை காட்டி ஆசிரியையை மிரட்டத் தொடங்கினர்.
அவர்கள் ஆசிரியையின் வீட்டிற்கே சென்று, பணம் மற்றும் போதைப்பொருட்களைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளைப் பதுக்கி வைத்து, மிரட்டி தொடர்ச்சியாக அவரிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட ஆசிரியை இது குறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்து வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின்போது ஆசிரியை அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, அந்த மாணவர் குழு தன்னுடன் நடத்திய பாலியல் உறவு, தன் முழுச் சம்மதத்துடனேயே நிகழ்ந்தது என்று ஆசிரியை தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு நீதிமன்றமே அதிர்ச்சியான நிலையில், வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read More : தீபாவளி பண்டிகை..!! ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த பிளிப்கார்ட்..!! பாதி விலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை..!!