கள்ளக்குறிச்சி அருகே தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, தனது மனைவி லட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு லட்சுமி வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக் கொண்டதை கொளஞ்சி நேரடியாகப் பார்த்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த கொளஞ்சி, அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலயீல், மனைவி லட்சுமி மற்றும் கள்ளக்காதலன் கந்தன் ஆகிய இருவரின் தலைகளையும் துண்டித்து, அதை எடுத்துக் கொண்டு வேலூர் சிறையில் சரணடைந்தார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கணவன் கொளஞ்சியை கைது செய்தனர். விசாரணையில், இந்த கொலைக்கு கள்ளக்காதல் தான் காரணம் என தெரிந்தது. இதையடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : உங்களுக்கு நோயே வரக்கூடாதா..? அப்படினா இந்த பாரம்பரிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கோங்க..!!



