தொழிலதிபர்களின் மனைவியுடன் பழகி, உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களின் ஆபாச புகைப்படங்களை காட்டி நகை, பணம் பறித்து குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது தொழிலதிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். ஆனால், இவர் தொழில் காரணமாக சென்னையில் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால், வாரந்தோறும் கோவைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தொழிலதிபரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர், இனி மனைவி, பிள்ளைகளை பார்க்க கோவைக்கு வரக்கூடாது என்றும், அதையும் மீறி வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது, மிரட்டல் விடுத்தவர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஸ்வீட்சன் என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் போலீசில் புகாரளித்த நிலையில், நாராயணன் என்ற பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டு, அந்த சிம் கார்டை ஸ்வீட்சன் பயன்படுத்தி தொழிலதிபரை மிரட்டி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில், ஸ்வீட்சனை பிடிக்க போலீசார் சென்றபோது, அவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ”கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த ஸ்வீட்சன் என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் இசை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், சிங்காநல்லூரில் பணிபுரிந்தபோது அந்த தொழிலதிபரின் மனைவியுடனும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகளுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தை பயன்படுத்தி ஸ்வீட்சன், தொழிலதிபர் மனைவியுடன் நெருக்கமான புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார். பின்னர், அந்த புகைப்படங்களை காட்டி ஸ்வீட்சன் பணம், நகைகளை மிரட்டி வாங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலதிபர் மனைவியின் தந்தை, ஸ்வீட்சனை கண்டித்துள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து ஸ்வீட்சன் மீண்டும் தொழிலதிபர் மனைவியை தொடர்பு கொண்டு தனது காதல் வலையை வீசியுள்ளார்.
இதேபோல பல பெண்களிடம் குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலதிபர்களின் மனைவிகளை குறிவைத்து, அவர்களுடன் பழகி பணம், நகைகளை பறித்து வந்துள்ளார். தொழிலதிபர்களின் மனைவியை குறிவைத்து பழகும் இவருக்கு, அவரது குடும்பத்தினரே உடந்தையாக இருந்துள்ளனர். மேலும், உல்லாசமாக இருப்பதற்கு பல பெண்களுடன் ஸ்வீட்சன் பழகி வந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஸ்வீட்சனின் மனைவியும் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
இரவு நேரங்களில் தனது மனைவி அருகில் இருக்கும்போதே பல பெண்களிடம் வீடியோ கால்களில் பேசி ஆபாச புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார்” என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஸ்வீட்சன் மற்றும் அவரது குடும்பத்தினரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
Read More : பிரபல கொரிய நடிகர் ‘Choi Jung Woo’ காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி..!!