ஒவ்வொரு நாட்டிலும் திருமண சடங்கு வித்தியாசமானது. ஆனால், உகாண்டாவில் வாழும் பனியன்கோல் பழங்குடியினர் பின்பற்றும் திருமணச் சடங்கு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
அங்கு, திருமணத்திற்கு முன்பாகவே மணப்பெண்ணின் தாய் புதுமாப்பிள்ளையுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது அவர்களது வழக்கம். இதன்மூலம் மணமகன் தம்பதிய வாழ்க்கைக்கு ஏற்றவரா இல்லையா என்பதை மணப்பெண்ணின் தாய் தீர்மானிப்பார். அவர் திருப்தி அடைந்தால் தான் திருமணம் நடைபெறும்; இல்லையெனில் திருமணம் ரத்து செய்யப்படும்.
அத்துடன், முதலிரவிலும் கூட, மணப்பெண்ணின் தாய் திருமணம் ஆன தம்பதியருக்கு அருகில் இருந்து தாம்பத்திய உறவை கற்பித்து வழிகாட்டும் நடைமுறையும் உள்ளது. பனியன்கோல் இனத்தவரிடம் திருமணத்தை ‘குஹிம்கிரா’ என்று அழைக்கின்றனர். 8 வயது முதல் 9 வயதுக்குள் சிறுமிகளுக்கே திருமணம் செய்து வைப்பது இவர்களின் பழக்கமாகும்.
திருமணத்துக்கு முன்பு மணமகள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும்; இல்லையெனில் திருமணம் ரத்து செய்யப்படுவதோடு, தண்டனையும் வழங்கப்படும். இந்த பழங்குடியினரின் கருத்தில், உடல் பருமனான பெண் தான் அழகானவர். அதற்காக, மணமகளுக்கு மாமிசம், பால், தினை கஞ்சி போன்ற கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் கட்டாயமாக அளிக்கப்படுகின்றன.
திருமண நாளில் மணப்பெண்ணின் தந்தை ஒரு மாட்டை அறுத்து விருந்தளிக்கிறார். முதலிரவு முடிந்த பின், மருமகனின் வீட்டாரும் அதேபோல் மாட்டை அறுத்து விருந்து அளிக்கின்றனர். திருமணத்துக்கு பிறகும் கூட, தம்பதியர் உடலுறவு கொள்ளும் போது குடும்ப உறவினர்கள் அருகில் இருப்பது வழக்கம். உலகின் பல இடங்களில் கலாசாரம், பழக்கம், நம்பிக்கைகள் மாறுபட்டாலும், உகாண்டா பனியன்கோல் இனத்தவரின் இந்த சடங்கு உலகளவில் சர்ச்சைக்கும் அதிர்ச்சிக்கும் காரணமாக உள்ளது.