சினிமாவில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.. அப்படியே தொடர் வெற்றிகளை கொடுத்தாலும் அதை தக்க வைப்பது என்பது மிகவும் முக்கியம்.. அப்படி பெரிய வெற்றிகளை கொடுத்து பான் இந்தியா ஹீரோவாக மாறி மீண்டும் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் மீண்டும் கம்பேக் கொடுத்து உச்ச நடிகர் ஒருவர் இருக்கிறார்.. அவர் யாருமில்லை ரெபல் ஸ்டார் பிரபாஸ் தான்.. பிரபாஸ் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இன்று பிரபாஸ் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், பணக்காரர் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. அவரின் சொத்து மதிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கை குறித்து தற்போது பார்க்கலாம்..
2002-ம் ஆண்டு ‘ஈஷ்வர்’ என்ற படத்தின் மூலம் பிரபாஸ் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 2004-ம் ஆண்டு வெளியான வர்ஷம் படம் அவருக்கு பிரேக் த்ரூ படமாக அமைந்தது. இதை தொடர்ந்து சத்ரபதி, புஜ்ஜிகாடு, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.. இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக மாறினார்.
ஆனால் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, 2 ஆகிய படங்கள் தான் அவரின் நட்சத்திர அந்தஸ்தை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றது.. இந்தப் படங்களின் மூலம், பிரபாஸின் பெயர் உலக அளவில் பிரபலமானது.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளைச் சந்தித்த பிரபாஸ், ‘சலார்’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு பவர்ஃபுல் கம்பேக் கொடுத்தார்.. மேலும், மேடம் துசாட்ஸில் தனது மெழுகுச் சிலையைப் பெற்ற முதல் தெலுங்கு மற்றும் தென்னிந்திய நடிகர் பிரபாஸ் ஆவார். கடந்த ஆண்டு வெளியான ‘கல்கி 2898 கி.பி’ படத்தின் மூலம் மீண்டும் ரூ.1000 கோடி கிளப்பில் நுழைந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 1000 கோடி வசூல் செய்த 2 படங்களை வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய ஹீரோ என்ற சாதனையை பிரபாஸ் படைத்துள்ளார்.
பிரபாஸின் சொத்து மதிப்பு :
ஹைதராபாத்தில் ரூ.60 கோடி மதிப்புள்ள ஆடம்பர வீடு, மும்பையில் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் இத்தாலியில் வாங்கப்பட்ட காண்டோ என நடிகரின் ரியல் எஸ்டேட் என பல ஆடம்பர வீடுகள் பிரபாஸுக்கு சொந்தமாக உள்ளன..
மேலும் அவர் கோடிக்கணக்கிலான ஆடம்பர வாகனங்களையும் அவர் வைத்திருக்கிறார்.. பிரபாஸின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 30 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது பணக்கார நடிகர்களில் ஒருவராக அவரது இடத்தை உறுதிப்படுத்துகிறது.
மேலும், பிரபாஸின் குடும்பத்திற்கு ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, மும்பை, புனே போன்ற பெருநகரங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், ஒரு கிரானைட் தொழிற்சாலை மற்றும் பண்ணை வீடுகள் உள்ளன. அவருக்கு வெளிநாட்டில் சொந்தமாக ஒரு வீடும் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபாஸின் வரவிருக்கும் படங்கள் அவர் இப்போது எவ்வளவு பிஸியாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. பிரபாஸின் அடுத்த படமான ‘தி ராஜாசாப்’ படம் ஜனவரியில் திரைக்கு வர உள்ளது. மேலும் ‘ஃபௌஜி’, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘கல்கி 2’ போன்ற பிரம்மாண்ட படங்களையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார்.. ரசிகர்கள் பிரபாஸின் அடுத்த படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
Read More : செம க்யூட்! முதன்முறையாக மகளின் முகத்தை ரிவீல் செய்த தீபிகா – ரன்வீர் ஜோடி!



