லாட்ஜில் ரூம் போட்டு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் உல்லாசம்..!! அடுத்த நிமிஷமே நடந்த பயங்கரம்..!! காட்டுக்குள் தொங்கிய சடலம்..!!

Sex 2025 2

கேரள மாநிலம் கண்ணூர் அருகே திருமணமான பெண்ணை படுகொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கண்ணூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் (லாட்ஜ்), கே.வி.சீமா என்ற பெண் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சீமா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியானது.


விசாரணையில், சீமா தனது காதலரான விஜயன் என்பவருடன் அந்த விடுதிக்கு வந்துள்ளது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதும், நீண்ட காலமாக இவர்களிடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்ததும் அம்பலமானது. விடுதி அறையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த விஜயன், சீமாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், தலைமறைவான விஜயனைத் தேடி வந்த காவல்துறையினர், விடுதிக்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் அவர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை கண்டறிந்தனர். காதலியைக் கொன்ற குற்ற உணர்விலோ அல்லது சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவோ அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ஏய்.. இங்க வாடி..!! குரு என்றும் பாராமல் ஆசிரியையின் உதட்டை கடித்து குதறிய மாணவன்..!! வெளியான பகீர் சிசிடிவி காட்சி..!!

CHELLA

Next Post

ஆயுள் முழுக்க செவிடாகப் போறீங்களா..? 60/60 ரூல்ஸ் பற்றி தெரியுமா..? ஹெட்ஃபோன் பயன்படுத்துவோர் கட்டாயம் படிக்க வேண்டியவை..!!

Fri Feb 6 , 2026
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட ஹெட்போன்கள் மற்றும் இயர்போன்கள், சத்தமில்லாமல் நமது செவித்திறனைப் பறிக்கும் எமனாக உருவெடுத்துள்ளன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இளைஞர்கள், தாங்கள் ஒரு மிகப்பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதை உணராமலேயே மணிக்கணக்கில் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் சாதாரண காதுவலியாக தொடங்கும் இந்த பாதிப்பு, காலப்போக்கில் நிரந்தர செவிடாக மாறும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் […]
Head Phone 2026

You May Like