கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, பிரபல யூ டியூபர் சாட்டை துரை முருகன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்..
கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. பொதுமக்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. எனினும் விஜய் மீது எந்த தவறும் இல்லை இது திமுக செய்த சதி என்று தவெகவினர் கூறிவருகின்றனர்..
இந்த நிலையில் பிரபல யூ டியூபர் சாட்டை துரை முருகன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து பேட்டியளித்த அவர் “ ஒரு 25,000 பேர் கூடிய கூட்டத்தில் 41 பேர் இறந்து போனதற்கே தப்பித்து தலைதெறித்து ஓடிய நீங்கள் முதலமைச்சராக மாறினால் என்ன ஆகும்? விஜய் யார் என்றே தெரியாத ஒன்றரை வயது குழந்தை வாயில் மிதப்பட்டு இறந்த வலியை எப்படி கடக்க முடியும்? இதற்கு யார் காரணம்? கர்ப்பிணி வயிற்றில் இருந்த குழந்தை, அந்த பெண் என 2 பேர் இறந்துவிட்டார்கள்.. ஒரு மாற்றுத்திறனாளி தாய், காது கேட்காது, வாய் பேச முடியாது, குழந்தை இறந்துவிட்டது.. அவரால் தனது வலியை வெளிப்படுத்த முடியவில்லை.. நீ பிறந்ததில் இருந்தே எப்படி இருப்பன்னு எனக்கு தெரியாதுடா.. நீ எப்படி இருப்ப என்று கண் பார்வை இல்லாத தாய் சொல்கிறார்.. அதை கேட்ட உடன் எனது ஈரக்குலையே நடுங்கி விட்டது..
உனது படங்களை பார்த்து ரசித்து கொண்டாடிய சிறுவர்கள், காலையில் இருந்து 6 மணியில் இருந்து சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல், ஆக்ஸிஜன் இல்லாமல் நெருக்கடியில் நின்று செத்து போயிருக்கான்.. நீ எங்கடா போன..? தலைவனா இருந்தால் நீ அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும்..
கரூர் மாவட்ட கண்காணிப்பாளர், தவெகவின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து, கூட்டம் கட்டுக்கடங்கமால் உள்ளது.. காலையில் இருந்து சாப்பாடு இல்லை, உணவு இல்லை.. உள்ளே நாங்களும் செல்ல முடியவில்லை.. அவர்களும் வெளியே வர முடியவில்லை.. இடம் நிரம்பிவிட்டது.. ஒருவேளை அவர் வந்தால் விபத்துகள் நடக்கலாம் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கிறார்.. ஆனால் புஸ்ஸி ஆனந்த் அதை கண்டுகொள்ளவில்லை.. ஏனெனில் கரூர் என்பது செந்தில் பாலாஜியின் கோட்டை, திமுகவின் கோட்டை.. அங்கு நாம் ஓட்டை போடணும்.. இங்கு பெரிய கூட்டத்தை குடுட வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள்.. விஜய் இந்த மனநிலையில் இருந்து வெளியே வந்தால் மட்டும் தான் இனி அரசியல் செய்ய முடியும்.. மக்கள் செருப்பால் அடிப்பார்கள்.. ஏனெனில் எந்த அரசியல் அறிவும் இல்லாத முட்டாள் கூட்டம்.. தற்குறி கூட்டம் விஜய்யின் பின்னால் இருக்கிறது..” என்று தெரிவித்தார்..
Read More : Breaking : தவெக நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல்.. அக்.14 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு..



