செருப்பால் அடித்தார்.. கெட்ட வார்த்தையில் திட்டினார்.. வாணி ராணில நடிச்சதே தப்பு..!! – ராதிகா குறித்து நடிகர் பப்லு ஓபன் டாக்

bablu rathika

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பப்லு என்ற பிரித்திவிராஜ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். வானமே எல்லை, பாண்டிநாட்டு தங்கம், அவள் வருவாளா என பல திரைப்படத்தில் நடித்து பெயர் எடுத்த இவருக்கு, சினிமாவில் வாய்ப்பு இல்லாததால், சீரியலில் நடித்தார். மர்மதேசம் தொடங்கி அன்பே வா வரை பல சீரியல்களில் நடித்துள்ள பப்லு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.


இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பப்லு வாணி ராணி சீரியலில் நடிந்த போது நிகழ்ந்த மோசமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், அந்த சீரியல் எனக்கு கிழவன் என்கின்ற ஒரு பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்தேன் அதிலும் ஒரு அப்பா கதாபாத்திரத்தில் நடித்தேன். இதனால், பப்லூ அப்பா கதாபாத்திரத்திற்கு தான் சரியானவர் என்கின்ற பெயர் வந்துவிட்டது.

அதைத் தொடர்ந்து 19 படத்தில் என்னை அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். ஆனால், முடியாது என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு தான் ‘ஏஸ்’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைத்தார்கள். நான் வாணி ராணி சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தபோது, ஏன் ஓவராக நடிக்கிறீர்கள். மேடம் திட்டுகிறார்க, என்று என்னிடம் வந்து சொல்லுவார்கள். இதனால், என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன்.

என்னை ஃப்ரீயாக விட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக அந்த சீரியலில் நடித்திருப்பேன். கெட்ட நினைவுகளை பற்றி பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் வாணி ராணி சீரியல் பற்றி கேட்டதும் என்னை அறியாமல் எமோஷனல் ஆகிட்டேன். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் எவ்வளவு நல்ல விஷயங்கள் பேசினாலும் அது வைரல் ஆகாது. ஏதாவது, தவறாக ஒரு வார்த்தை பேசி இருந்தால் அது வைரலாகிவிடும் என்றார்.

தொடர்ந்து பேசிய பப்லு, ராதிகாவிடமே பப்லு உங்களைப் பற்றி இப்படி தவறாக பேசிவிட்டாரே என்று கேட்டாலும் கூட, அவர் ஆமாம் நான் அவனை செருப்பால் அடித்தேன், கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவேன் என்று பெருமையாகத்தான் பேசுவார். என்னை அவன் தவறாக பேசிவிட்டானே என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு இருக்காது. இதுதான் அவர்களின் சுபாவம் என்று கூறினார்.

Read more: விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்… தமிழக அரசின் சூப்பர் திட்டம்…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

Next Post

“எந்த விதிவிலக்கும் இல்ல..” இதை செய்தால் 10% கூடுதல் வரி.. ட்ரம்ப் எச்சரிக்கை..

Mon Jul 7 , 2025
அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இதற்கு விதிவிலக்குகள் எதுவும் இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், […]
20250214034154 Trump Don

You May Like