அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.. இந்த சூழலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அக்கட்சி எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.. அதில் “ தமிழக வரலாற்றின் மாபெரும் சகாப்தம்! ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்து இன்றளவும் தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம். அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த நம் வாழ்நாள் வழிகாட்டி… கறுப்பு-வெள்ளை-சிவப்பு மூவர்ணத்தையும் , இரட்டை இலையையும் தமிழகத்திற்கான பாதுகாப்பு அரணாய் விட்டு சென்று, அதிமுக எனும் எஃகு கோட்டையை உருவாக்கிய இதய தெய்வம், #எங்கள்_வாத்தியார்_MGR அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்.
நாற்காலிக்காக அரசியலுக்கு வராமல், நலிந்தவர்களின் நல்வாழ்விற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் நம் புரட்சித்தலைவர் அவர்கள். புரட்சித்தலைவரின் உடன்பிறப்புகளுக்கு வருகின்ற தேர்தல் களம் , நம் தலைவர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் வலிமையை பறைசாற்றும் தளம். துரோகங்களை வீழ்த்தி, எதிரிகளை முறியடித்து, மீண்டும் ஏழை எளியோரின் ஆட்சியை, இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழிவந்த , கழகத்தின் மூன்றாம் அத்தியாயம் ,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் மலரச்செய்ய புரட்சித் தலைவரின் நினைவு நாளில் உறுதியேற்போம்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
எனினும் அதிமுகவின் இந்த பதிவு விஜய்க்கு கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.. ஏனெனில் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், எம்.ஜி.ஆர், அண்ணா தமிழ்நாட்டின் சொத்து என்றும், அவர்கள் பெயரை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று யாரும் கதற வேண்டாம் என்று கூறியிருந்தார்.. இதன் மூலம் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி அதிமுகவின் வாக்குகளை விஜய் வாங்க முயற்சிக்கிறார் என்று கூறப்பட்டது.. மேலும் களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் நாங்கள் எதிர்ப்போம் என்றும் கூறியிருந்தார்.. அதிமுகவை தான் களத்தில் இல்லாத கட்சி என்று விஜய் கூறுகிறார் என்று கூறப்பட்டது.. இந்த சூழலில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அதிமுகவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : EPS பெயரை சொல்லவே வெட்கமாக இருக்கு.. அவரை வீழ்த்துவதுதான் நமது முதல் நோக்கம்..! OPS பளீச்..



